BREAKING NEWS

 வாழப்பாடி கனரா வங்கி முன்பு தற்கொலை தற்கொலைக்கு முயன்ற போதை ஆசாமியால் பரபரப்பு.

 வாழப்பாடி கனரா வங்கி முன்பு தற்கொலை தற்கொலைக்கு முயன்ற போதை ஆசாமியால் பரபரப்பு.

 

சேலம் மாவட்ட வாழப்பாடியில் கனரா வங்கி இயங்கி வருகிறது இதில் 5 மாதங்களுக்கு முன்பு மாரியம்மன் புதூர் பகுதியைச் சேர்ந்த பிரபு என்பவர் வங்கி கணக்கை துவங்கி உள்ளார் இதனிடையே இன்று அவருடைய ஏடிஎம் கார்டு பழுதானதாக கூறப்படுகிறது.

 

 

பிரபு என்பவர் வங்கி மேலாளர் இடம் தகவல் தெரிவித்தும் வங்கி மேலாளர் புதிய ஏடிஎம் கார்டு வருவதற்கு ஒரு வாரம் ஆகும் காத்திருங்கள் என கூறியுள்ளார். ஆத்திரமடைந்த பிரபு மது அருந்திவிட்டு வந்து வங்கி முன்பு மண்ணெண்ணெய் ஊற்றிக்கொண்டு தற்கொலைக்கு முயற்சித்துள்ளார்.

 

 

தகவல் அறிந்து வந்த வாழப்பாடி காவல்துறையினர் அவரை மீட்டு விசாரணை மேற்கொண்டதில் அவர் மது அருந்தி இருப்பது தெரியவந்தது மேலும் காவல்துறை அதிகாரிகள் வங்கி மேலாளர் இடம் பேசி பிரபு என்பவரின் வங்கி கணக்கில் இருந்த 2950 அவரிடம் ஒப்படைத்தனர்.

 

 

மண்ணெண்ணெய் ஊற்றிக் கொண்ட பிரபுவுக்கு அறிவுரை கூறி வீட்டிற்கு அனுப்பி வைத்தனர் காவல்துறையினர் இதனால் வங்கி முன்பு ஒரு மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

 

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )