BREAKING NEWS

தமிழக காங்கிரஸ் மாநில தலைவர் கே எஸ் அழகிரிக்கு எதிராக போர் கொடி.

தமிழக காங்கிரஸ் மாநில தலைவர் கே எஸ் அழகிரிக்கு எதிராக போர் கொடி.

கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம்.

 

மாநில பொருளாளர் ரூபி மனோகரன் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுப்பதற்கு எதிர்ப்பு – தமிழக காங்கிரஸ் மாநில தலைவர் கே எஸ் அழகிரிக்கு எதிராக போர் கொடி மாவட்ட தலைவர் காமராஜ் பொறுப்பில் இருந்து விலகுவதாக கோவில்பட்டியில் பேட்டி.

 

தமிழக காங்கிரஸ் தலைமை அலுவலகமான சத்தியம் மூர்த்தி பவனில் கடந்த சில தினங்களுக்கு முன்பு கட்சி நிர்வாகிகளுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டு மோதல் ஏற்பட்டது.

 

இச்சம்பவம் குறித்து தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி காந்தி மண்டபத்தில் வைத்து மாவட்ட தலைவர் காமராஜ் பத்திரிக்கையாளர்களை சந்தித்தார் அப்போது கடந்த 15 ஆம் தேதி நடந்த கட்சிக்கு எதிராக நடந்த சம்பவங்களுக்கு மாநிலத் தலைவரும் மாநில பொருளாளரும் தான் பொறுப்பு அதை விடுத்து..,

 

மாநில பொருளாளர் மற்றும் சட்டமன்ற உறுப்பினராக உள்ள ரூபி மனோரான் மீது மட்டும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சொல்வதும் மாவட்டத் தலைவர்களை கலந்து ஆலோசிக்காமல் தீர்மானம் தன்னிச்சையான செயல் இதனை நெல்லை மாவட்ட தொண்டர்களின் கோரிக்கை என்னவென்று கேட்காமல் அவர்களை அவமானப்படுத்தி கொண்டர்களை வைத்து தாக்குவது தலைமைக்கு அழகு அல்ல.

 

ராஜீவ் காந்தி கொலை குற்றவாளிகள் 6 பேர் விடுதலையை கண்டித்து கண்டன தீர்மானமும் அதை எதிர்த்து கட்சி நடவடிக்கையோ எடுக்காததை கண்டித்தும் தூத்துக்குடி வடக்கு மாவட்ட தலைவர் பொறுப்பிலிருந்து விலகுவதாக தெரிவித்தார் மேலும் தனது உயிர் மூச்சு உள்ளவரை காங்கிரஸில் பயணிக்க இருப்பதாகவும் வேறு மாற்று கட்சிக்கு செல்ல மாட்டேன் என்றும் தெரிவித்தார்.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )