BREAKING NEWS

பட்டுக்கோட்டை அருகே பல லட்சம் மதிப்புள்ள ஐம்பொன் அம்மன் சாமி சிலை திருட்டு- போலீசார் விசாரணை.

பட்டுக்கோட்டை அருகே பல லட்சம் மதிப்புள்ள ஐம்பொன் அம்மன் சாமி சிலை திருட்டு- போலீசார் விசாரணை.

 

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள புக்கரம்பை ஊராட்சிக்குட்பட்ட மேற்குடிக்காடு கிராமத்தில் உள்ள அறநிலையத்துறைக்கு சொந்தமான தான்தோன்றி அம்மன் கோயிலில் தனி அறையில் வைக்கப்பட்டிருந்த ஐம்பொன் சாமி சிலையை மர்ம நபர்கள் அறையின் பூட்டை உடைத்து திருடி சென்றனர்.

 

இதனை அடுத்து தடய அறிவியல் வல்லுனர்கள் வரவழைக்கப்பட்டு சேது பாவாசத்திரம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கொள்ளை போன ஐம்பொன் அம்மன் சிலை இரண்டரை அடி கொண்ட சிலை என கூறப்படுகிறது.

 

 

இந்த சிலை 1969 ஆம் ஆண்டு செய்யப்பட்ட சிலை எனவும் இதன் மதிப்பு தற்போதைய காலகட்டத்தில் கிட்டத்தட்ட 50 லட்சத்திற்கும் மேல் இருக்கும் என கூறப்படுகிறது.

 

இந்த சிலை திருட்டு போனதால் இந்த கிராமத்து மக்கள் மிகுந்த வேதனை அடைந்துள்ளனர். மேலும் இந்த சிலையை உடனடியாக மீட்டு தர வேண்டுமென அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

 

இது தொடர்பான புகாரின் பேரில் சேதுபாவாசத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )