BREAKING NEWS

உள்கட்சி பூசல் காங்கிரஸ் கட்சி கொடியேற்றம் கட்சி நிர்வாகிகள் அதிருப்தி.

உள்கட்சி பூசல் காங்கிரஸ் கட்சி கொடியேற்றம் கட்சி நிர்வாகிகள் அதிருப்தி.

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை இளம் தலைவர் ராகுல் காந்தி அவர்களின் இந்திய ஒற்றுமை நடைபயணம் 100 நாள் வெற்றி விழா 18 12 2022 ஞாயிறு அன்று மாவட்டத் தலைவர் தலைமையில் மாநில ஒழுங்கு நடவடிக்கை குழு தலைவர் மற்றும் கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்துகொண்டு 15 இடங்களில் மானாமதுரை நகரத்தில் கொடியேற்றும் நிகழ்வு நடைபெற்றது.

 

 

அதற்குப் போட்டியாக சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் உயர்திரு கார்த்திக் பா.சிதம்பரம் எம்பி அவர்கள் மாவட்டத் தலைவர் அவர்களுக்கு தகவல் தெரிவிக்காமல், நகரத் தலைவர் அவர்களுக்கு தகவல் தெரிவிக்காமல்.

 

 

உள்ளூர் நிகழ்ச்சிகளில் ஏற்கனவே கொடியேற்றப்பட்ட இடங்களுக்கு அருகாமையில் கார்த்திக் பா.சிதம்பரம் சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் அவர்கள் தனது சில ஆதரவாளர்களை வைத்துக்கொண்டு புதன்கிழமை மானாமதுரை நகராட்சிக்கு உட்பட்ட சில இடங்களில் கொடி ஏற்றி வைத்தார். 

 

 

இந்த நிகழ்வு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி மற்றும் மானாமதுரை நகர் காங்கிரஸ் கமிட்டி இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இவர் தனது ஆதரவாளர்களான சில நபர்களை வைத்துக்கொண்டு தொடர்ந்து சிவகங்கை மாவட்டத்தில் உள்கட்சி கோஷ்டி பூசலை ஏற்படுத்தி வருகிறார். இவர் ஏற்படுத்தும் கோஷ்டி பூசலால் சிவகங்கை மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சி வளர்ச்சியும் ஆரோக்கியத்தையும் பெரும் பாதிப்புக்கு உள்ளாக்குகிறது.

 

 

இதுபோன்ற நிகழ்வுகள் பின்வரும் காலங்களில் தொடர்ந்தால் காங்கிரஸ் கட்சிக்கு வளர்ச்சிக்கு பெரும் பின்னடைவு ஏற்படுத்தும்.

 

சிவகங்கை காங்கிரஸ் கட்சியின் மாவட்ட தலைவர் பா சத்தியமூர்த்தி, மாநில எஸ்சி எஸ்டி துணைத் தலைவர் டாக்டர் எஸ் செல்வராஜ், மானாமதுரை நகர் காங்கிரஸ் கமிட்டி நகரத் தலைவர் எம் கணேசன், மேற்கு வட்டார தலைவர் கே கணேசன், மாவட்டத் துணைத் தலைவர் காசிராஜன், மாவட்ட இணை செயலாளர் ஜி காசி, மாவட்ட பொதுச் செயலாளர் கே பிரேம சந்திரன், நகர எஸ்சி எஸ்டி பிரிவு தலைவர் பழனிவேல் ராஜன், நகர சிறுபான்மை தலைவர் எஸ் காஜா முகைதீன்,

 

நகரத் துணைத் தலைவர் பா முத்து குமார், மாவட்ட செயற்குழு உறுப்பினர் டி.தங்கச்சாமி, பொருளாளர் பி சேதுராமன், மூங்கில் ஊரணி மாங்குளம் பஞ்சாயத்து கவுன்சிலர் எம் பாலுச்சாமி, நகரச் செயலாளர் தனபால், மானாமதுரை நகர மகளிர் காங்கிரஸ் கமிட்டி தலைவி எஸ் சாந்தி, இளைஞர் காங்கிரஸ் சட்டமன்ற தொகுதி தலைவர் க சோனைராஜ் கருப்புசாமி, சிறுபான்மை துணைத் தலைவர் செய்யது அஹமத் பஷுர், பொது செயலாளர் எம் விஜேந்திரன்,

 

முத்துக்குமார், சரவணன், ராஜ்குமார், அரவிந்த், மணிகண்டன், மகளிர் பொதுச் செயலாளர் பாண்டீஸ்வரி, மேலும் பல முக்கிய நிர்வாகிகளுக்கு தகவல் தெரிவிக்காமல் சிவகங்கை நாடாளுமன்ற காங்கிரஸ் கட்சியின் எம்.பி திரு.கார்த்திக் பா சிதம்பரம் அவர்கள் மானாமதுரை நகர் காங்கிரஸ் கமிட்டியில் கொடியேற்றிய நிகழ்வு பெரும் தாக்கத்தையும் அதிருப்தியையும் ஏற்படுத்தி உள்ளது. 

 

இவர் தொடர்ந்து தனது ஆதரவாளர்கள் சிலர் வைத்துக்கொண்டு தன்னிச்சையாக செயல்பட்டு வந்து கொண்டிருக்கிறார்.

 

 

இவர் கட்சி சம்பந்தப்பட்ட எந்த ஒரு முடிவுகளையும் சிவகங்கை மாவட்டம் காங்கிரஸ் கட்சியின் மூத்த நிர்வாகிகள் மற்றும் மாவட்ட தலைவர் மற்றும் நகர வட்டார தலைவர்கள் இளைஞர் காங்கிரஸ் தொகுதி தலைவர்கள் காங்கிரஸ் கட்சியின் தொண்டர்கள் இடத்தில் கலந்து பேசி முடிவு எடுப்பதில்லை

இதனால் கட்சி நிர்வாகிகள் இடத்தில் மன உளைச்சலையும் காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சியையும் பாதிக்கும் செயலாக ஏற்படுத்தி வருகிறது.

 

இவ்வாறு இளைஞர் காங்கிரஸ் மானாமதுரை சட்டமன்ற தொகுதி தலைவர் கா சோனராஜ் கருப்புசாமி அவர்கள் கருத்து தெரிவித்தார்.

 

CATEGORIES
TAGS