கனிமொழி எம்பி பிறந்தநாளையொட்டி கோவில்பட்டி அரசு தலைமை மருத்துவமனையில் பிறந்த 18 குழந்தைகளுக்கு நகர மன்ற தலைவர் மோதிரம் வழங்கினார்.

கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம்.
திமுக மாநில துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி எம்பி பிறந்தநாளையொட்டி கோவில்பட்டியில் நகர திமுக சார்பில் அரசு மருத்துவமனையில் பிறந்த 18 குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கப்பட்டது. நகர செயலாளரும், நகர மன்ற தலைவர் கருணாநிதி தலைமையில் குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவித்தார்.

நிகழ்ச்சியில் மாவட்ட வர்த்தக அணி அமைப்பாளர் ராஜகுரு, துணை அமைப்பாளர்கள் தவமணி, பரமசிவம், பொதுக்குழு உறுப்பினர்கள் சிவசுப்பிரமணியன், பீட்டர், ராமர், மாவட்ட இலக்கிய அணி அமைப்பாளர் மணி, மாவட்ட சிறுபான்மை பிரிவு துணை அமைப்பாளர் அமலிபிரகாஷ், மேற்கு ஒன்றிய செயலாளர் ராதாகிருஷ்ணன், அவைத்தலைவர் முனியசாமி,

மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர்கள் தாமோதரக்கண்ணன், கணேசன், செல்வமணிகண்டன், நகர வர்த்தக அணி அமைப்பாளர் துரை, மாவட்ட பிரதிநிதிகள் மாரிச்சாமி, ரவீந்திரன், நகர பொருளாளர்கள் ராமமூர்த்தி,

காளியப்பன், வழக்கறிஞரணி துணை அமைப்பாளர்கள் குருசெல்லப்பா, ராமச்சந்திரன், நகர்மன்ற உறுப்பினர்கள் விஜயன், சண்முகவேல், உலகராணி தாமோதரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
