அத்தாணியில் தமிழ்நாடு நீர்வள நிலவள திட்டத்தின் கீழ் உளுந்து சாகுபடி குறித்து பண்ணை பள்ளி வகுப்பு நடைபெற்றது.

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே அத்தாணி கிராமத்தில் 2022 – 23 தமிழ்நாடு நீர்வள நிலவள திட்டத்தின் கீழ் உளுந்து சாகுபடி குறித்து பண்ணை பள்ளி வகுப்பு வேளாண்மை உதவி இயக்குனர் ஜெயராணி தலைமையில் நடைபெற்றது.

இதில் வேளாண்மை அலுவலர் ஐஸ்வர்யா வரவேற்புரையாற்றினார் வேளாண்மை உதவி இயக்குனர் ஜெயராணி தலைமை உரையாற்றினார். குமுளூர் வேளாண்மை கல்லூரி மண்ணியல் துறை ஆய்வாளர் சிவரஞ்சனி மண்ணின் தன்மை குறித்தும், மண்வளம் குறித்தும், மண்வள பாதுகாப்பின் அவசியம் குறித்தும் உரையாற்றினார்.
முன்னோடி விவசாயிகள் உள்ளிட்ட 26 விவசாயிகள் இதில் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை இந்தப் பகுதி உதவி வேளாண்மை அலுவலர் பார்த்திபன் செய்திருந்தார்.
CATEGORIES திருச்சி
