BREAKING NEWS

உப்புத்துறை கிராமத்தில் ஸ்ரீ காளியம்மன் கோவில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.

உப்புத்துறை கிராமத்தில் ஸ்ரீ காளியம்மன் கோவில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி தாலுகாவிற்கு உட்பட்ட கடமலை மயிலை அருகே உள்ள உப்புத்துறை கிராமத்தில் ஸ்ரீ காளியம்மன் கோவில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.

 

12 ஆண்டுகளுக்கு பின்னர் நடைபெற்ற இந்த கும்பாபிஷேக விழாவில் நேற்று விக்னேஸ்வர பூஜையுடன் துவங்கிய கும்பாபிஷேக விழா முதல் கால யாக சாலை வளர்க்கப்பட்டு,

 

 

பின்பு இன்று அதிகாலை இரண்டாம் கால யாகசாலை பூஜை மற்றும் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் ஓத பல்வேறு சடங்கு சம்பிரதாய நிகழ்வுகள் ஆகம விதிப்படி நடைபெற்று மூன்றாம் கால யாகசால பூஜை நடத்தப்பட்டு கும்பாபிஷேக விழா தொடங்கியது.

 

 

இந்த கும்பாபிஷேக விழாவில் சிவாச்சாரியார்கள் கோவில் கோபுரத்தில் ஏறி மூலஸ்தான விமானத்தில் 108 புண்ணிய தீர்த்தங்களில் இருந்து கொண்டுவரப்பட்ட புனித நீரை ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தினர்.

 

 

முன்னதாக கும்பாபிஷேக கலச நீரை கோவில் கோபுரத்தில் ஊற்ற சிவாச்சாரியார்கள் ஏறும்போது ஏராளமான பெண் பக்தர்கள் பக்தி பரவசத்தில் குலவையிட்டு சாமி ஆடினர்.இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு காளியம்மனை சாமி தரிசனம் செய்தனர்.

 

CATEGORIES
TAGS