மாற்றுத்திறனாளி பயணாளிகளுக்கு வழங்கப்பட வேண்டி ஊர்திகளை குப்பையில் போட்டுள்ள நகராட்சி நிர்வாகம்
புதுக்கோட்டை நகராட்சிக்கு உட்பட்ட மாற்றுதிரனாளிகளுக்கு தமிழக அரசு இலவசமாக கொடுக்கப்பட்ட ஊர்திகளை பயனர்களுக்கு வழங்காமல் பழைய பேப்பர் மற்றும் பழைய பொருட்கள் போடப்படும் அறையில் குப்பைகளை போல் சுமார் 100 க்கும் மேற்பட்ட ஊர்திகளை புதுக்கோட்டை நகராட்சி அலுவலகத்தில் கிடப்பில் போட்டு உள்ளனர் நகராட்சி அலுவலர்கள்.
நடக்க முடியாமல் ஊர்ந்து திரியும் மாற்றுத்திரனாளிகளுக்கு தமிழக அரசால் வழங்கப்பட்ட ஊர்திகளை கொடுத்தால் நகராட்சியின் பாரம் குறைந்து. விடுமா?
குளிர்சாதன வாகனம், குளிர்சாத அறை என சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வரும் அரசு ஊழியர்களே மாற்றுத்திரனாளிகளின் மனதை சற்று நினைத்து பாருங்கள்
இந்த பதிவு மூலமாக மாற்றுத்திரனாளிகளுக்கு ஊர்திகள் கிடைத்தால் சந்தோஷம்தான் என சமுக ஆர்வலர்கள் சிலர் கூறுகின்றனர்..
CATEGORIES புதுக்கோட்டை
TAGS குற்றம்தமிழ்நாடுதலைப்பு செய்திகள்புதுக்கோட்டைபுதுக்கோட்டை நகராட்சிபுதுக்கோட்டை மாவட்டம்மாற்றுத்திறனாளிகள் ஊர்திமுக்கிய செய்திகள்