கீ கொடுத்தால் ஆடுகின்ற பொம்மையாகதான் முதல்வர் ஸ்டாலின் இருக்கிறார் தேனி ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் கோகுல் இந்திரா பேச்சு
அத்தியவாசிய பொருட்களின் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த தவறிய திமுக அரசை கண்டித்து தமிழக முழுவதும் அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதன் ஒரு பகுதியாக தேனி பங்களாமேடு பகுதியில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா மற்றும் ஏராளமான அதிமுக நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா, செந்தில் பாலாஜி உள்ளிட்ட அமைச்சர்கள் கீ கொடுத்தால் என்னவென்று தெரியாமல் ஆடுகின்ற பொம்மை முதல்வராக ஸ்டாலின் இருக்கிறார்.
மாமன்னன் படம் குறித்து பேசும் திமுகவினர் ஆட்சிக்கு வந்தபின் முதல் கையெழுத்தாக மதுவிலக்கை கொண்டு வரும் நீட் தேர்வை ரத்து செய்வோம் என்ற வாக்குறுதிகள் குறித்து பேசுவதில்லை. காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய விலைவாசி உயர்வு போன்றவற்றை தமிழக மக்களுக்கு தருகிற அரசாக திமுக அரசு இருக்கிறது.
முதலமைச்சர் மற்றும் அவரது மகன் குறித்த ஊழல் பற்றி தெரிவித்த அமைச்சரின் ஆடியோ வெளியானதால் அவரின் அமைச்சர் பதவி மாற்றப்பட்டது ஆனால் செந்தில் பாலாஜிக்காக மருத்துவமனைக்குச் சென்று கண்ணீர் விடுகிறார் முதலமைச்சர் இரண்டு ஆண்டு கால ஆட்சியில் கமிஷன் கலெக்ஷன் கரப்ஷன் என்று செயல்பட்ட திமுக மக்கள் பிரச்சனைகளில் முக்கியத்துவம் கொடுத்ததில்லை மக்கள் நலனில் அக்கறை செலுத்துவதில்லை திமுக எப்போதெல்லாம் ஆட்சிக்கு வருகிறதோ அப்போதெல்லாம் அரிசி கடத்தல் கட்டப்பஞ்சாயத்து கொலை கொள்ளைகள் சம்பவம் அதிகரிக்கிறது.
எடப்பாடி பழனிச்சாமி புரட்சித் தலைவராக பார்க்க வேண்டும் புரட்சித்தலைவி அம்மாவாக பார்க்க வேண்டும் தொண்டராக பார்க்க வேண்டும் என கூறினார் பின்னர் ஆளும் தமிழக அரசுக்கு எதிரான கண்டன கோஷங்களை எழுப்பினர்