அருள்மிகு ஸ்ரீ செல்லியம்மன் ஆலய திருக்குட நன்னீராட்டு திருவிழா வெகு விமர்சியாக நடைபெற்றது.
அவரக்கரை பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ செல்லியம்மன் ஆலய திருக்குட நன்னீராட்டு திருவிழா வெகு விமர்சியாக நடைபெற்றது. அருள்மிகு ஸ்ரீ செல்லியம்மன் ஆலய திருக்குட நன்னீராட்டு விழாவை முன்னிட்டு பல்வேறு புண்ணிய தலங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட தண்ணீர்கள், கலசத்தில் நிரப்பப்பட்டு சிறப்பு யாக பூஜை வழிபாடுகள் மேற்கொள்ளப்பட்டு ,கலச புண்ணிய தீர்த்தங்களை தலையில் சுமந்தபடி கோவிலை சுற்றி மூன்று முறை வளம் வந்து பின்னர் கோபுர கலசத்துக்கு கொண்டு சென்று வேத மந்திரங்கள் முழங்க கோபுரம் கலசங்களின் மீது புண்ணிய கலச தீர்த்தங்களை ஊற்றி மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டு , அருள்மிகு ஸ்ரீ செல்லியம்மன் ஆலய திருக்குட நன்னீராட்டு விழா நடைபெற்றது .
இந்த விழாவில் தமிழக கைத்தறி மற்றும் துணிநூள் துறை அமைச்சர் ஆர்,காந்தி பங்கேற்று சாமி தரிசனம் செய்து வழிபட்டார் மேலும் இந்த நிகழ்ச்சியின் போது 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்து அருள் பாவித்து சென்றனர்.