திருக்கடையூர் அடுத்து காடுவெட்டி இரவணியன் கோட்டகம் ஸ்ரீ பத்ரகாளியம்மன் கோயில் பூக்கரகம் மற்றும் பால்குட திருவிழா
மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுக்கா, திருக்கடையூர் அடுத்து டீ மணல்மேடு ஊராட்சி, காடுவெட்டி, இரவணியன் கோட்டகம் கிராமத்தில் ஸ்ரீ பத்ரகாளியம்மன் கோயிலில் சித்திரை பால்குடம் மற்றும் பூக்கரகம் நடைபெற்றது. தொடர்ந்து ஸ்ரீ அய்யா, ஸ்ரீ வீரனார், ஸ்ரீ விநாயகர் ஸ்ரீ பேச்சாயி அம்மன் ஆகிய ஸ்வாமிகளுக்கு அபிஷேக ஆராதனையும் அதனை தொடர்ந்து
ஸ்ரீ பத்ரகாளியம்மனுக்கு சிறப்பு பூஜைகளும் நடைபெற்றது.
தொடர்ந்து பூக்கரகம் எடுத்து சுவாமி வீதியுலா நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை காடுவெட்டி, இரவணியன் கோட்டகம் விழா குழுவினர், ஊர் முக்கியஸ்தர்கள், கிராமவாசிகள், மகளிர் சுயஉதவிக் குழுக்கள் மற்றும் ஸ்ரீ காளியம்மன் இளைஞர் நற்பணி மன்றத்தினர் செய்திருந்தனர்மன்றத்தினர் செய்திருந்தனர்.