வேலூர் மாவட்டத்துக்கு நியமிக்கப்பட்ட கைத்தறி துறை அமைச்சர் விஜய பாலாஜி குடியாத்தம் பகுதியில் திடீர் ஆய்வு!

வேலூர் மாவட்டம், குடியாத்தம் மக்களுக்கு மிகவும் அத்தியாவசியமான
மிகவும் பயனுள்ளதுமான கீழ்கண்ட கோரிக்கைகளை முன்வைத்து மனுவாக ஆய்வு செய்ய வந்த அமைச்சர் விஜய பாலாஜியிடம் குடியாத்தம் புதிய நீதிக்கட்சி நகர செயலாளர் கைத்தறி காவலன் ரமேஷ் வழங்கினார்.

(1) குடியாத்தம் தலைமை அரசு மருத்துவமனையில் காலியாக இருக்கும் பணியிடங்களை நிரப்ப வேண்டும்.
(2) குடியாந்தம் பிச்சனூர் கங்காதர சாமி நகராட்சி நடுநிலைப் பள்ளியை உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்த 15 ஆண்டுகளாக போராடி வருகிறோம். எனவே மேற்கண்ட பள்ளியை தரம் உயர்த்தி தந்து எங்கள் பகுதியை கல்வி மேம்பட உதவி செய்ய வேண்டும் .
(3) கைத்தறி நெசவாளர்களுக்கு தற்போது கொடுக்கப்பட்டுள்ள நெசவு கூலியை குறைத்துள்ள தனியார் மண்டி முதலாளிகளை அழைத்து முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்.
4) குடியாத்தம் டாக்டர் அம்பேத்கர் சிலை மற்றும் அதனைச் சுற்றி 4 பள்ளிகள் உள்ளன. இந்த பள்ளிகள் அமைந்துள்ள இடத்தில் இருந்து 100 மீட்டர் தொலைவில் உள்ள மதுபான டாஸ்மாக் கடையை நிரந்தரமாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் .
5). குடியாத்தம் ஆர். எஸ். ரோட்டில் உள்ள பிரம்மாஸ் பள்ளி மற்றும் சில தனியார் பள்ளிகளில் அரசு நிர்ணயம் செய்துள்ள கல்விக் கட்டணத்தை விட கூடுதலாக அதிக மடங்கு வசூல் செய்து வரும் பள்ளிகளை கல்வித் துறை அதிகாரிகள் ஆய்வு செய்து மேற்கண்ட குறைபாடுகளை களைய நடவடிக்கை எடுத்து பொது மக்களுக்கு உதவிட வேண்டும்.
6) குடியாத்தம் நகராட்சிக்குட்பட்ட பகுதியில் வரும் குழாய்களில் உப்பு நீர் கலந்து குடிநீரை வீணாக்கி வருகிறது. இந்த தண்ணீரை பொதுமக்கள் குடிக்க வேண்டிய அவலநிலை நிலவி வருகிறது.. மேலும் மூன்று வருடங்களுக்கு முன் ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் நகராட்சி முலம் விநியோகம் செய்யப்பட்டது. ஆனால் இரண்டு வருடமாக மேற்கண்ட குடிநீர் விநியோகம் செய்யப்படுவது இல்லை. எனவே எங்களுக்கு ஒகேனக்கல் கூட்டு குடிநீர் கிடைக்க அமைச்சர் வழி வகை செய்ய வேண்டும். மேற்கண்ட மனுவில் உள்ள உண்மை நிலையை கண்டறிந்து மக்களுக்காக செயல்படும் தமிழக முதல்வர் ஜோசப் விஜய்யின் நல்லாட்சியில் மேற்கண்ட கோரிக்கைகளை நிறைவேற்றி தர சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு பரிந்துரை செய்யுமாறு தங்களை பணிவன்புடன் கேட்டு கொள்கிறோம்.
இவ்வாறு அந்த கோரிக்கை மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
