ஈரோடு வடக்கு மற்றும் தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டிகளின் சார்பாக ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலில் களப்பணியாற்றிட ஆலோசனைக் கூட்டம்.!

ஈரோடு வடக்கு மற்றும் தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டிகளில் ஆலோசனைக் கூட்டம் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி தேர்தல் பணிமனையில் இன்று காலை 11 மணிக்கு வடக்கு மாவட்ட தலைவர் எஸ்.வி.சரவணன் தலைமையில்,
தெற்கு மாவட்ட தலைவர் மக்கள் ஜி ராஜன் வரவேற்புரையாற்றிட தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி செயல் தலைவர் மோகன் குமாரமங்கலம், ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் பொறுப்பாளர் டி திருச்செல்வம் ஆகியோர் முன்னிலையில்,
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் தன்மானத் தலைவர் திருமிகு ஈவிகேஎஸ் இளங்கோவன் அவர்கள் உரையாற்றினார் பின் இக்கூட்டத்தில் தீவிரமாக கை சின்னத்திற்கு வாக்குகளை சேகரித்து மாபெரும் வெற்றிடைய செய்வது என தீர்மானிக்கப்பட்டது.
இக் கூட்டத்தில் மாவட்ட நிர்வாகிகள், வட்டார தலைவர்கள்,மண்டல தலைவர்கள், மாநில பொது குழு உறுப்பினர்கள், வார்டு தலைவர்கள், நகர மன்ற உறுப்பினர்கள், துணை அமைப்பு தலைவர்கள் ஆகியோர் திரளாக கலந்து கொண்டனர்.
