BREAKING NEWS

குடியாத்தம் அகில பாரத மக்கள் சக்தி இயக்கம் சார்பில் திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு திருக்குடை சமர்ப்பண யாத்திரை! 

குடியாத்தம் அகில பாரத மக்கள் சக்தி இயக்கம் சார்பில் திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு திருக்குடை சமர்ப்பண யாத்திரை! 

வேலூர் மாவட்டம், குடியாத்தம் தாலுகா, குடியாத்தம் சந்தைப்பேட்டை, சீதாராமன் ஆஞ்சநேயர் சுவாமி கோவிலில், அகில பாரத மக்கள் சக்தி இயக்கம் சார்பில் திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு திருக்குடை சமர்ப்பிக்கும் யாத்திரை தொடங்கி நடைபெற்றது. இதையொட்டி சீதாராமன் ஆஞ்சநேயர் சுவாமி கோவிலில் வெங்கடேச பெருமாளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதை தொடர்ந்து திருக்குடைக்கு சிறப்பு பூஜைகள் செய்து, பக்தர்கள் பங்கேற்ற திருக்குடை ஊர்வலம் நடைபெற்றது.

இந்த ஊர்வலத்திற்கு அகில பாரத மக்கள் சக்தி இயக்கத்தின் நிறுவனத் தலைவர் சி. கார்த்திக் ஜி மற்றும் மாநில தலைவர் ராம. சரவணன் ஆகியோர் தலைமை வகித்தனர். திருக்குடை கமிட்டியினர் எஸ். ரமேஷ், எஸ். சந்தோஷ் குமார், எம்.எஸ். யுவராஜ், கிருஷ்ணமூர்த்தி, ஆர். கோபி, ஆர்.ஜே. அன்பு மற்றும் இயக்கத்தின் நிர்வாகிகள், உறுப்பினர்கள் முன்னிலை வகித்தனர். திருக்குடை ஊர்வலத்தில் கங்கை அம்மன் சுவாமிகள், சுயம்பு கருப்புசாமி சித்தர், சக்தி சதீஷ் சுவாமிகள் உள்ளிட்ட ஆன்மிகப் பெரியோர்கள் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

குடியாத்தம் நகரின் முக்கிய வீதிகள் வழியாக மேளதாளங்கள் முழங்க நடைபெற்ற திருக்குடை ஊர்வலம், பிச்சனூர் பகுதியில் உள்ள தென்திருப்பதி வெங்கடேச பெருமாள் ஆலயத்தை சென்றடைந்தது. அங்கு சிறப்பு பூஜைகள் மற்றும் வழிபாடுகள் நடைபெற்றதையடுத்து திருக்குடை ஊர்வலம் நிறைவு பெற்றது.

oplus_0

பாரம்பரிய திருக்குடை சமர்ப்பணத்தின் வரலாறு: திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் சுவாமி வெங்கடேச பெருமாளுக்கு குடை சமர்ப்பிக்கும் வழக்கம் நீண்டகாலமாக இருந்து வருகிறது. திருமலை ஸ்ரீவாரி பிரம்மோற்சவத்தின் முக்கிய நிகழ்வுகளில் சுவாமிக்கு அலங்கரிக்கப்படும் குடைகள் ஊர்வலமாகக் கொண்டு வரப்பட்டு சமர்ப்பிக்கப்படுவது பாரம்பரியமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. திருமலை பிரம்மோற்சவ காலத்தில் ரதோற்சவத்தையொட்டி தங்கக் குடையை ஊர்வலமாகக் கொண்டு சென்று ஸ்ரீவாரியின் ரதத்தில் நிறுவும் மரபும் இருப்பதாக திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் அதிகாரப்பூர்வ பதிவுகள் தெரிவிக்கின்றன. மேலும், பந்துலு குடும்பத்தினர் விஜயநகர மன்னர் ஸ்ரீகிருஷ்ணதேவராயர் காலத்திலிருந்து குடை சமர்ப்பிக்கும் மரபைத் தொடர்ந்து வந்ததாகவும், 1952ஆம் ஆண்டு முதல் தங்கக் குடை சமர்ப்பிக்கப்பட்டு வருவதாகவும் டி.டி.டி. பதிவுகள் குறிப்பிடுகின்றன.

அதேபோல், பல்வேறு இந்து அமைப்புகள் மற்றும் பக்தர்கள் தங்களது நேர்த்திக்கடன் மற்றும் பக்தியின் வெளிப்பாடாக அலங்காரக் குடைகளை திருமலைக்கு ஊர்வலமாக எடுத்துச் சென்று ஸ்ரீவாரிக்கு சமர்ப்பித்து வருகின்றனர். சென்னை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து குடைகள் ஊர்வலமாக திருமலைக்கு கொண்டு வரப்பட்டு, ஸ்ரீவாரி பிரம்மோற்சவத்தின் கருடசேவை உள்ளிட்ட நிகழ்வுகளில் பயன்படுத்தப்பட்டுள்ளன.

இந்நிலையில், குடியாத்தத்தில் நடைபெற்ற இந்த திருக்குடை சமர்ப்பண யாத்திரை, பக்தி மற்றும் பாரம்பரியத்தை பறைசாற்றும் வகையில் நடைபெற்றது. கலை நிகழ்ச்சிகள் திருக்குடை ஊர்வலத்தையொட்டி பாரம்பரிய சிலம்பாட்டம், ஸ்ரீ ராமபிரானின் பஜனைப் பாடல்கள், நாட்டுப்புற ஆன்மிகக் கலை நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் கோலாகலமாக நடைபெற்றன. இதில் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் புரட்டாசி முதல் சனிக்கிழமை பெருமாளுக்கு விரதம் இருந்து கோவிந்தா.. கோவிந்தா… கோவிந்தா…. என்ற முழக்கத்துடன் திரளாக கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். இந்த திருக்குடை ஊர்வலத்தினால் குடியாத்தம் நகரமே குலுங்கியது குறிப்பிடத்தக்கது. இந்த திருக்குடைய ஊர்வலத்திற்கு குடியாத்தம் போலீசார் பாதுகாப்பு கொடுத்து எந்த அசம்பாவிதமும் நடைபெறாமல் ஊர்வலத்தை சந்தப்பேட்டையில் இருந்து தென்திருப்பதி பெருமாள் கோவில் வரை கொண்டு சென்று சேர்த்தனர் என்பது குறிப்பிடத்தக்கது இந்த குடை ஊர்வலத்திற்கான அனைத்து ஏற்பாடுகளையும் கார்த்திக்ஜி மற்றும் கைத்தறி காவலன் எஸ். ரமேஷ் ஆகியோர் சீறும் சிறப்புமாக நடத்தி காண்பித்தது குடியாத்தம் நகர பொதுமக்களை வியப்பில் ஆழ்த்தியதும் குறிப்பிடத்தக்கது. இதுபோன்ற ஆன்மீக ஊர்வலங்கள் இவ்வளவு விமரிசையாக இனி யாராலும் நடத்த முடியாது என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது.

CATEGORIES
TAGS