BREAKING NEWS

குடியாத்தம் பிச்சனூர்பேட்டை கங்காதர சாமி நகராட்சி நடுநிலைப் பள்ளியை உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்த கோரி புதிய நீதிக் கட்சி சார்பில் எம்எல்ஏவிடம் கோரிக்கை மனு அளிப்பு!

குடியாத்தம் பிச்சனூர்பேட்டை கங்காதர சாமி நகராட்சி நடுநிலைப் பள்ளியை உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்த கோரி புதிய நீதிக் கட்சி சார்பில் எம்எல்ஏவிடம் கோரிக்கை மனு அளிப்பு!

வேலூர் மாவட்டம், குடியாத்தம் நகரம், பிச்சனூர்பேட்டை கங்காதர சாமி நகராட்சி நடுநிலைப் பள்ளியை உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தக் கோரி குடியாத்தம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சிந்துவிடம் புதிய நீதி கட்சியின் நகரச் செயலாளர் மற்றும் கைத்தறி காவலன் எஸ். ரமேஷ், பள்ளி கல்விக் குழு முன்னாள் துணைத் தலைவர் கோ. ஜெயவேலு ஆகியோர் மரியாதை நிமித்தமாக சால்வை அணிவித்து விட்டு கோரிக்கை மனு அளித்தனர்.

இந்தப் பள்ளியை உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்திக் கோரி பல்வேறு போராட்டங்கள், பல அரசியல் தலைவர்களை சந்தித்து கோரிக்கை மனு அளித்து வருகின்றார் புதிய நிதி கட்சியின் நகர செயலாளர் கைத்தறி காவலன் எஸ் ரமேஷ். குறிப்பாகச் சொல்ல வேண்டும் என்றால் அவர் இந்த பள்ளியை தரம் உயர்த்தாமல் ஓய மாட்டேன் என்பதில் உறுதியோடும் பொதுமக்களுக்கு ஏதாவது தன்னால் இயன்றது செய்ய வேண்டும் என்றும் பணியாற்றி வருகிறார்.

கல்விக் கண்ணை திறந்த கர்ம வீரர் காமராஜர் போட்டியிட்ட இந்த தொகுதியில் மேலும் ஒரு பள்ளியை தரம் உயர்த்துவதற்காக தொடர்ந்து போராடி வருகிறார் இந்த போராளி எஸ் ரமேஷ் என்பது குறிப்பிடத்தக்கது. அவரது தொடர் முயற்சி தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக ஆட்சியில் நிறைவேறும் என்பது திண்ணம்.

இம்முறை பள்ளியை தரம் உயர்த்தியே தீருவோம் என்ற கொள்கையுடனும், லட்சியத்துடனும் அவர் செயல்பட்டு வருகிறார். இம்முறை அவரது எண்ணம் ஈடேறும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை என்றே சொல்லலாம். தற்போது குடியாத்தம் தொகுதி எம்எல்ஏவிடம் மனு அளித்த போது ரமேஷூடன் குடியாத்தம் சட்டமன்ற தேர்தல் பொறுப்பாளர், தமிழக வெற்றி கழக நகர செயலாளர் இளங்கோ மற்றும் பலர் உடன் இருந்தனர்.

Share this…

CATEGORIES
TAGS