BREAKING NEWS

குத்தாலம் அருகே முத்தூர் கிராமத்தில் திமுக அரசின் இரண்டு ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம்:-

குத்தாலம் அருகே முத்தூர் கிராமத்தில் திமுக அரசின் இரண்டு ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம்:-

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுகா முத்தூர் ஊராட்சியில் திமுக அரசின் இரண்டு ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் குத்தாலம் கிழக்கு ஒன்றிய செயலாளர் மங்கை சங்கர் ஏற்பாட்டில் நடைபெற்ற கூட்டத்திற்கு ஒன்றிய அவை தலைவர் தியாகராஜன் தலைமை வகித்தார்.

ஒன்றிய துணைச் செயலாளர்கள் பாலு, ரவிச்சந்திரன், பொருளாளர் முரளி, மாவட்ட பிரதிநிதிகள் கணேசன், எழிலரசன், நெடுமாறன், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் மகேஷ், கிளைச் செயலாளர் மாதவன், கலைமோகன், சுபாஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்

நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளர்களாக மாவட்ட திமுக செயலாளரும் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினருமான நிவேதா எம் முருகன், தலைமைக் கழக பேச்சாளர் பழச்சூர் கே.செல்வம் பங்கேற்று திராவிட முன்னேற்றக் கழக அரசின் இரண்டு ஆண்டு சாதனைகளை விளக்கி சிறப்புரையாற்றினர்.

மேலும் கூட்டத்தில் திமுக உயர்நிலை செயல்திட்ட குழு உறுப்பினர் குத்தாலம் பி.கல்யாணம், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் மங்கை உமாமகேஸ்வரி சங்கர், சொற்பொழிவாளர் வழுவூர் ஆர்.மதிமிதா, ஒன்றிய பொறியாளர் அணி அமைப்பாளர் திவாஸ் உள்ளிட்டோர் பங்கேற்று உரையாற்றினர்.

இதில் ஊராட்சி மன்ற தலைவர்கள் சங்கீதா நெடுமாறன், சதீஷ், செல்வராஜ், சீதாலட்சுமி மதிவாணன், ராஜேஷ்கண்ணா, விஜயா தங்கமணி, அன்பரசன், மோகன் உள்ளிட்ட ஏராளமான திமுக நிர்வாகிகள், பொதுமக்கள் பங்கேற்றனர்

CATEGORIES
TAGS