தமிழகம் முழுவதும் சார் பதிவாளர்களாக பணிபுரிபவர்கள் இருக்கும் இடத்தை தக்க வைக்க பேரம் நடக்குது: தமிழ்நாடு அரசியலில் அதிரடி வசூல் வேட்டை!

தமிழக சட்டசபைக்கு விரைவில் தேர்தல் நடைபெற உள்ளது. அதாவது வரும் 6 மாதங்களுக்குள்ளாக தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி தமிழகத்தில் உள்ள துறை சார்ந்த அமைச்சர்கள் அந்தந்த துறையில் உள்ளவர்களிடம் எவ்வளவு வசூல் செய்து கொள்ள முடியுமோ அவ்வளவு வசூல் செய்து கொள்ள முனைப்புடன் செயல்படுவதாக ஒரு ரகசிய தகவல் உலா வர ஆரம்பித்துள்ளது.
குறிப்பாக சார் பதிவாளர்களாக பணியாற்றும் பலர் தற்போது இருக்கும் இடத்திலேயே தொடர்வதற்கும், அவர்கள் விருப்பப்படி வேரு இடம் மாற்றம் ( TRANSFER ) செய்ய ரூபாய் 30 லட்சத்திலிருந்து, ரூபாய் 50 லட்சம் வரை பேரம் பேசப்பட்டு வசூல் வேட்டை நடத்துகின்றனர் என்று தெரியவந்துள்ளது.

இது ஒரு நம்பகமான தகவல் என்பதும் குறிப்பிடத்தக்கது. வரும் ஜனவரி முதல் வாரத்துக்குள் இதற்கான தொகையை அந்தந்த துறை தலைவர்களிடம் கொடுக்க வேண்டும் என்று ஒரு ரகசிய தகவல் உலா வர ஆரம்பித்துள்ளது.
தற்போது இருக்கும் இடத்திலேயே இருந்து கொள்ள விரும்புபவர்கள் டாப் அப் செய்து கொள்ளலாம். அதற்கு ரூபாய் 50 லட்சம் கப்பம் செலுத்த வேண்டும் என்று அரசு துறை உயர் அதிகாரிகள் தரப்பில் அழுத்தம் கொடுக்கப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளி வருகின்றன.

இதனை வேலூர் சார் பதிவாளர் பத்மபிரியா வருவோர் போவோரிடமெல்லாம் சொல்லி ஆதங்கப்பட்டு வருகிறார்.
இவர் வேலை பார்ப்பதை விட தற்போது இந்த வேலையைத்தான் அதிக அளவில் பார்த்து வருகிறார்.
அவ்வப்போது ஒரு ஆட்டோவை நிறுத்திக் கொண்டு அதில் வீட்டுக்கு செல்வது, திடீரென காணாமல் போவது, அலுவலகத்துக்கு வந்துள்ள பொதுமக்களை காக்க வைத்து அவர்களை நோகடிக்கச் செய்கிறார் பத்மபிரியா.

இதை கேட்டால் நான் பத்து மணி அலுவலகத்துக்கு 11 மணிக்கு வந்தால் நீங்கள் பொறுத்துக் கொள்கிறீர்களா என்று பொது மக்களை பார்த்து கேள்வி கேட்கிறார்.
இப்படி தெனாவெட்டாக நடந்து கொள்வது பொதுமக்களை கிள்ளு கீரைகள் போல் நடத்துகிறார் இந்த பத்மபிரியா. இவர் மீது சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் துறை ரீதியான நடவடிக்கை எடுப்பார்களா? என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

இவருக்கு பின்புலமாக 40-க்கும் மேற்பட்ட புரோக்கர்கள் இவரை (பலாப்பழத்தை ஈ சுற்றுவது போல) சுற்றி சுற்றி வருகின்றனர். அவர்களுக்கு மட்டுமே வேலூர் சார் பதிவாளர் அலுவலகத்தில் முதலிடம் தரப்படுகிறது.
பொதுமக்கள் நாயை விட கேவலமாக நடத்தப்படுகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. மக்களை பார்த்தாலே இவர் நாயை விரட்டுவது போல எரிந்து விழுகிறார், விரட்டியடிக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதற்கெல்லாம் முடிவு கட்டப்படுமா? அல்லது இதே நிலை தொடருமா? என்பதற்கு காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.
“ஒரு தவறு செய்தால் அதைத் தெரிந்து செய்தால் அவன் தேவன் என்றாலும் விடமாட்டேன்”
செய்தி ஆசிரியர் ச.வாசுதேவன்
