BREAKING NEWS

திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோயிலில் மண்டலாபிஷேகம்.

திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோயிலில் மண்டலாபிஷேகம்.

மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோயிலில் மண்டலாபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது…

திருக்கடையூரில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான அமிர்தகடேஸ்வரர் கோவில் உள்ளது. இந்தக் கோவிலில் தினந்தோறும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து செல்வது வழக்கம்.

மேலும் இங்கு மட்டுமே மணிவிழா, சதாபிஷேகம், ஆயுள்ஹோமம் உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகிறது. கடந்த மார்ச் 27- ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற்றது. இந்த நிலையில் தர்மபுர ஆதீனம் 27 -வது குருமகாசந்நதானம் மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் முன்னிலையில் மண்டலாபிஷேக பூஜை நடைபெற்றன. தொடர்ந்து விநாயகர், அமிர்தகடேஸ்வரர், காளசம்ஹாரமூர்த்தி, அபிராமி அம்மன் ஆகிய சாமிக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனையும் பூஜைகளும் நடைப்பெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

 

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )