பெரியகுளத்தில் அதிமுக ஓபிஎஸ் ஆதரவாளர்கள் எம்ஜிஆர் அவர்களின் 106 வது பிறந்தநாள் முன்னிட்டு அவரது திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்.

தேனி மாவட்டம் பெரியகுளம் அதிமுக ஓபிஎஸ் அணியைச் சேர்ந்த அவரது ஆதரவாளர்கள் எம்ஜிஆர் அவர்களின் 106 வது பிறந்த நாளை முன்னிட்டு,
நகரச் செயலாளர் அப்துல் சம்மது தலைமையில் தேனி பாராளுமன்ற உறுப்பினர் அலுவலகம் முன்பு அமைக்கப்பட்டு எம்ஜிஆர் அவர்களின் திருஉருவ படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி,

அங்கிருந்து இரு சக்கர வாகனங்களில் ஊர்வலமாக புறப்பட்டு பெரியகுளம் நகரின் முக்கிய வீதிகள் வழியாக இருசக்கர வாகனத்தில் ஊர்வலமாகச் சென்று வார்டு பகுதியில் அமைக்கப்பட்டிருந்த எம்ஜிஆர் அவர்களின் திருஉருவப்படத்திற்கு மாலை அணிவித்து கொடியேற்றி இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.

இந்நிகழ்ச்சியில் நகரச் செயலாளர் அப்துல் சமது 24 ஆவது வார்டு நகர் மன்ற உறுப்பினர் சண்முகசுந்தரம் மாவட்ட பிரதிநிதி அன்பு பொதுக்குழு குழு உறுப்பினர் சிவக்குமார் நகர் எம்ஜிஆர் மன்ற செயலாளர் ராஜவேல் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர் இருசக்கர வாகனத்தில் எம்ஜிஆர் அவர்களின் திருஉருவப்படத்தை நகரெங்கிலும் ஊர்வலமாகச் எடுத்துச் சென்று அவரது பிறந்த நாளை கொண்டாடினர்.
