அதிமுகவின் தேர்தல் அறிக்கை எங்களை பின்பற்றி கொடுக்கப்பட்டுள்ளது “நாங்கள் ACTIVE VOICE என்றால் அவர்கள் PASSIVE VOICE” என விமர்சனம்

அதிமுகவின் தேர்தல் அறிக்கை எங்களை பின்பற்றி கொடுக்கப்பட்டுள்ளது “நாங்கள் ACTIVE VOICE என்றால் அவர்கள் PASSIVE VOICE” என விமர்சனம்
ஆளுநர் இவ்வளவும் வாங்கிக் கொண்டு இருக்கிறார் என்றால் இவருக்கு சூடும் இல்லை சொரணையும் இல்லை என்று தான் அர்த்தம்
தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கே.வி குப்பத்தில் பேட்டி.
வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் இந்திய கூட்டணி சார்பில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் அறிமுக கூட்டம் கே.வி.குப்பம் சட்டமன்ற தொகுதியில் நடைபெற்றது இதில் இதில் அணைக்கட்ட சட்டமன்ற உறுப்பினர் நந்தகுமார், திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த், மற்றும் நீர்வளத்துறை அமைச்சரும் திமுக பொதுச்செயலாருமான துரைமுருகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த துரைமுருகன் கூறுகையில்
அதிமுகவின் தேர்தல் அறிக்கை எங்களை பின்பற்றி கொடுக்கப்பட்டுள்ளது “நாங்கள் ACTIVE VOICE என்றால் அவர்கள் PASSIVE VOICE” என விமர்சனம்.
டெல்லி முதல்வர் ஜார்க்கண்ட் முதல்வர் போன்றோரின் கைது எதிர்க்கட்சிகளுக்கு பாதிப்பு என்பதை விட நாட்டிற்கும் ஜனநாயகத்திற்கும் மிகப்பெரிய பாதிப்பு. தேர்தல் நேரத்தில் ஆட்சியில் இருக்கும் போது நடுவில் இறங்கி தன்னிடம் அதிகாரம் இருக்கிறது என்பதற்காக இத்தகைய செயலை செய்வது ஜனநாயகத்திற்கு அழகு அல்ல மோடி போன்றவர்களுக்கும் அழகல்ல என்பதுதான் எனது கருத்து.
ஆளுநரை நாங்கள் எதுவும் திட்டவில்லை ஆனால் சுப்ரீம் கோர்ட் திட்டி இருக்கிறது. இதற்குப் பிறகும் அவர் அந்த பதவியில் தொடர்வது அவருக்கு அழகல்ல காரணம் சுப்ரீம் கோர்ட் இதுவரையில் எந்த ஒரு அரசு அதிகாரியை பற்றியும் இவ்வளவு கேவலமாக சாட்டையில் அடிப்பது போல் பேசியது இல்லை. இவ்வளவும் வாங்கிக் கொண்டு இருக்கிறார் என்றால் இவருக்கு சூடும் இல்லை சொரணையும் இல்லை என்று தான் அர்த்தம்.
அதிமுகவின் தேர்தல் அறிக்கையில் மாநில ஆளுநரின் ஒப்புதலோடு ஆளுநரை நியமிக்க வேண்டுமென மத்திய அரசிடம் வலியுறுத்துவோம் என குறிப்பிட்டுள்ளது குறித்து கேட்டதற்கு, நாங்கள் ஆளுநரே வேண்டாம் என்கிறோம் அவர்கள் அப்படி சொல்கிறார்கள். நாங்களும் அதையேதான் சொல்கிறோம் இருந்தால் எங்களை கேட்டு இருக்க வேண்டும் என்று. “நாங்கள் ACTIVE VOICE என்றால் அவர்கள் PASSIVE VOICE” ல் கூறியிருக்கிறார்கள்.
அதேபோல அதிமுக தேர்தல் அறிக்கையை பொருத்தவரைக்கும் அவர்கள் தான் எங்களை பின்பற்றுகிறார்கள் என்றும் கூறினார்.
மேகதாதுவில் அணை கட்டிய தீருவோம் என கர்நாடக அமைச்சர் சிவக்குமார் கூறியது குறித்து கேட்டதற்கு, அந்தத் துறைக்கு அவர் தான் மந்திரி அப்படித்தான் சொல்லுவார் நான் ஏற்கனவே தெளிவாக சொல்லிவிட்டேன். எந்த அணையை கட்டுவதாக இருந்தாலும் மத்திய நீர்வளத் துறைக்கு அவர்கள் கடிதம் அனுப்ப வேண்டும் அதற்குப் பிறகு சுற்றுச்சூழல் துறைக்கு அனுப்ப வேண்டும் பின்னர் வனத்துறைக்கும் அனுப்ப வேண்டும் இவர்கள் எல்லாம் கிளியரன்ஸ் கொடுத்தாலும் கீழே உள்ள தமிழகத்தின் ஒப்புதலோடு தான் மத்திய அரசு அனுமதி கொடுக்க முடியும் இதுதான் சட்டம் ஆனால் கர்நாடக மக்களுக்கு ஏதாவது பண்ணனும் என்பதற்காக செங்கலை கொண்டு வந்தோம் சிமெண்டை கொண்டு வந்தோம் கட்டிய தீருவோம் என பேசிக் கொண்டிருக்கிறார்கள். சிவக்குமார் கொஞ்சம் வேகமாக இருக்கிறார் அவ்வளவுதான்.
தமிழகத்தில் நான்குமுனை போட்டி நிலவுவது குறித்து கேட்டதற்கு “நான்கு முனையா அது என்ன முனை என கேட்டார்”
மேலும் நான் எந்த கட்சியையும் குறை சொல்ல விரும்பவில்லை என அமைச்சர் துரைமுருகன் கூறினார்.
