BREAKING NEWS

கும்பகோணம் அருகே பா.ஜ.கட்சியின் OBC பிரிவின் மாநில செயலாளராக கார்த்திகேயன் இவரிடம் இருந்து நாட்டு வெடிகள், கத்தி மற்றும் ஏராளமான பத்திரங்கள் உள்ளிட்ட பொருட்களையும் அவரது சொகுசு கார் ஒன்றையும் பறிமுதல் செய்துள்ளனர்.

தஞ்சாவூர் மாவட்டம்; கும்பகோணம் அருகே சாக்கோட்டையில் பா.ஜ.கட்சியின் OBC பிரிவின் மாநில செயலாளராக கார்த்திகேயன் உள்ளார்.

இவர் , நிலம் தொடர்பாக கருப்பூரை சேர்ந்த சிவக்குமாரை மிரட்டியதாக வந்த புகாரினை தொடர்ந்து நாச்சியார் கோயில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து கார்த்திகேயன் வீட்டில் கடந்த 26ம் தேதி திருவிடைமருதூர் டி.எஸ்.பி. ஜாபர் சித்திக் தலைமையில் காவல்துறையினர் நடத்திய சோதனையில் நாட்டு வெடிகள், கத்தி மற்றும் ஏராளமான பத்திரங்கள் உள்ளிட்ட பொருட்களையும் அவரது சொகுசு கார் ஒன்றையும் பறிமுதல் செய்துள்ளனர்.

தற்போது தலைமறைவாக இருக்கும் கார்த்திகேயனை காவல்துறையினர் தேடி வருகின்றனர் . கார்த்திகேயன் மீது இரண்டு கொலை வழக்குகளும், மூன்று கொலை முயற்சி வழக்குகளும் ,கட்டப் பஞ்சாயத்து மிரட்டல் உள்ளிட்ட 7 வழக்குகள் நிலுவையில் உள்ளது.

மேலும் நாச்சியார் கோவில் காவல் நிலையத்தில் ரவுடிகள் பெயர் பட்டியலிலும் கார்த்திகேயன் பெயர் உள்ளது என்பது குறிப்பிடதக்கது.

CATEGORIES
TAGS