தஞ்சாவூர் மாவட்டத்தில் 718 பள்ளி வாகனங்கள் ஆய்வு மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தகவல்.

தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்பட்டு தொடர்ந்து நடைபெற்று வருகிறது இந்நிலையில் தஞ்சாவூரில் பள்ளிக்கு செல்லும் மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் பள்ளி போக்குவரத்து வாகனங்கள் தஞ்சாவூர் கும்பகோணம் பட்டுக்கோட்டை ஆகிய இடங்களில் தணிக்கைக்கு உட்படுத்தப்பட்டு ஆய்வு செய்யப்பட்டன.

இதேபோல் தஞ்சாவூரில் தஞ்சை ஆயுதப்படை மைதானத்தில் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் கலந்து கொண்டு போக்குவரத்து வாகனங்களில் வேகக் கட்டுப்பாடு கருவி இன்சூரன்ஸ் மருத்துவ வசதி சிசிடிவி அவசர கால கதவு மற்றும் கண் சிகிச்சை முகாம் உள்ளிட்டவைகளை ஆய்வு செய்தார் பின்னர் செய்தியாளர்களிடம் கூறிய மாவட்ட ஆட்சியர் தஞ்சை மாவட்டத்தில் மொத்தம் 718 பள்ளி வாகனங்கள் ஆய்வு செய்யப்படுவதாகவும் தஞ்சாவூரில் மட்டும் 270 வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன.
மோட்டார் வாகன சட்டப்படி அனைத்து வசதிகளும் உள்ளனவா என்பதை ஆய்வு செய்து பள்ளி மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று தெரிவித்தார் இந்த ஆய்வின் போது தஞ்சை மாவட்ட காவல் எஸ்பி ரவளிப்பிரியா வட்டார போக்குவரத்து அலுவலர் முருகன் போக்குவரத்து ஆய்வாளர் ஆனந்த் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
