தஞ்சையில் இரண்டு வீடுகளை மாநகராட்சி அதிகாரிகள் இடித்து தள்ளியதால் அனைத்து வீடுகளும் விதிக்கப்படுமோ என அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

தஞ்சாவூர் மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் கொண்டுவரப்பட்டதை அடுத்து கடந்த அதிமுக ஆட்சியில் வடக்கு அலங்கம் மேல் அலங்கம் கோட்டைமேடு உள்ளிட்ட பகுதிகளில் 8000 வீடுகளை அகற்ற முடிவு செய்யப்பட்டு நோட்டீஸ் வழங்கப்பட்டது.

அப்போது திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்போது கைவிடப்பட்டது.

இந்நிலையில் இன்று திடீரென மாநகராட்சி அதிகாரிகள் வடக்கு அலங்கம் பகுதிக்கு பொக்லீன் இயந்திரங்களுடன் வந்து பூங்காவனம் ராமலிங்கம் இருவரின் வீடுகளை இடித்து தள்ளினர்.

தஞ்சை கீழ ராஜவீதியில் பழமையான கட்டிடம் இன்று இடிந்து விழுந்ததை அடுத்து பராமரிப்பு இன்றி உள்ள வீடுகளை எடுக்க முடிவு செய்யப்பட்டு இந்த வீடுகள் இடிக்கப்பட்டதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஆனால் இதனை காரணம் காட்டி 8000 வீடுகளை இடிக்க திமுக மாநகராட்சி முயற்சி செய்வதாக அப்பகுதி மக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
