திருநெல்வேலி மாவட்டம், உவரி காவல் நிலைய சரகத்தில் அமைந்துள்ள ஸ்ரீ அருள் மிகு சுயம்புலிங்கம் சுவாமி கோவிலில் வைகாசி விசாக திருவிழா

திருநெல்வேலி மாவட்டம், உவரி காவல் நிலைய சரகத்தில் அமைந்துள்ள ஸ்ரீ அருள் மிகு சுயம்புலிங்கம் சுவாமி கோவிலில் வைகாசி விசாக திருவிழா 11.06.2022 மற்றும் 12.06.2022 ஆகிய இரு தினங்கள் நடைபெற்றது. இத்திருக்கோயில் சுமார் 7.5 இலட்சம் பொதுமக்கள் கலந்து கொண்டு சாமிதரிசனம் மேற்கொண்டனர்.


அப்போது திருவிழாவில் கலந்துகொண்ட குமாரபுரத்தைச் சேர்ந்த சுரேஷ்குமார் என்பவரின் மகனுடைய 1½ பவுன் தங்க செயின் காணாமல் போனதாக பாதுகாப்பு பணியில் இருந்த காவல் துறையினரிடம் தெரிவித்தார். உவரி காவல் ஆய்வாளர் திருமதி.செல்வி அவர்கள் தலைமையிலான போலீசார் மேற்படி தொலைந்துபோன செயினை மீட்டுக்கொடுத்தனர். மேலும் மாவட்ட காவல்துறையினர் எந்த ஒரு குற்ற சம்பவங்களும் நடைபெறா வண்ணம் கோவில் திருவிழாவில் சிறப்பான முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.


இச்சம்பவம் அறிந்து திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ப. சரவணன் இ.கா.ப., அவர்கள் கோவில் பாதுகாப்பு பணியில் குற்ற சம்பவங்கள் சிறப்பாக பணி செய்ததற்காவும், திருவிழாவில் காணாமல் போன 1½பவுன் தங்க நகையை மீட்டு உரியவரிடம் ஒப்படைப்பதற்காக உவரி காவல் ஆய்வாளர் திருமதி. செல்வி அவர்கள் தலைமையிலான காவல்துறையினரை நேரில் அழைத்து பாராட்டி பரிசு வழங்கி ஊக்குவித்தார்.
