BREAKING NEWS

தூத்துக்குடியில் தவெக சார்பில் போதையில்லா தமிழகத்தை நோக்கி மாபெரும் ஆர்பாட்டம்

தூத்துக்குடியில் தவெக சார்பில் போதையில்லா தமிழகத்தை நோக்கி மாபெரும் ஆர்பாட்டம்

தூத்துக்குடியில் தவெக சார்பில் போதையில்லா தமிழகத்தை நோக்கி மாபெரும் ஆர்பாட்டம் மாவட்ட பொறுப்பாளர் அஜிதா ஆக்னல் தலைமையில் நடைபெற்றது

தூத்துக்குடி மாவட்ட தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் “போதையில்லா தமிழகத்தை நோக்கி” என்ற எழுச்சி முழக்கத்துடன் போதைக்கு எதிரான விழிப்புணர்வு பேரணியானது

 

தூத்துக்குடி மாவட்ட பொறுப்பாளர் அஜிதா ஆக்னல் தலைமையில் இன்று மாலை வி.வி.டி. சிக்னல் பேருந்து நிறுத்தம் அருகில் இருந்து தொடங்கி தெற்கு காவல் நிலையம் எதிரே உள்ள அண்ணல் அம்பேத்கர் சிலை வரை போதைக்கு எதிரான விழிப்புணர்வு பேரணியானது நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.

 

பேரணிக்கு காவல்துறை அனுமதி மறுத்த நிலையில் போராட்டம் நடைபெற்ற இடத்தில் இருந்து சுமார் 200 மீட்டர் தூரம் மட்டும் சென்று பிறகு போராட்டம் நடைபெற்ற மேடைக்கு திரும்பிய மாவட்ட பொறுப்பாளர் அஜிதா ஆக்னல் தலைமையில் தற்காலிகமாக நான்கு சக்கர வாகனத்தில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது மேடையில் போதையில்லா தமிழகத்தை நோக்கி என்ற மாபெரும் ஆர்பாட்டத்தில் “குடிப்பதை நிறுத்தி விடு”, “குடிப்பவர்கள் நட்பை ஒதுக்கி விடு,” குடியை விடு,” படிக்க விடு,” போதை! போதை! அது சாவின் பாதை…., போதையை தொடாது… சாதனை படைத்துடு… போதை பயணம், பாதையில் மரணம்… என்ற முழக்கங்களை நிகழ்த்தினார்கள்.

போராட்டத்தில் மாவட்ட மதுவிலக்கு சபைகளின் இயக்குனர் அருட்தந்தை ஜெயந்தன் உட்பட தூத்துக்குடி மாவட்ட தமிழக வெற்றிக் கழக தோழர்கள் மற்றும் தோழிகள் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.

https://youtu.be/1PLpoxvetl0

CATEGORIES
TAGS