தூத்துக்குடி விமான நிலையத்தில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு

தூத்துக்குடி வாகைகுளம் விமான நிலையத்தில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வருகை வடக்கு மற்றும் தெற்கு மாவட்டம் திமுக சார்பில் உற்சாக வரவேற்பு
கன்னியாகுமரி மாவட்டத்தில் நடைபெறுகின்ற திமுக மாநில மீனவர் அணி செயலாளர் ஏ.ஜே. ஸ்டாலின் இல்லத் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக இன்று சென்னையில் இருந்து இன்று மாலை 3.50 விமானத்தில் தூத்துக்குடி வருகை தந்த திமுக இளைஞரணி செயலாளரும், விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சரும், துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலினுக்கு திமுக தூத்துக்குடி வடக்கு மற்றும் தெற்கு மாவட்டம் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
தூத்துக்குடி வாகைகுளம் விமான நிலைய வரவேற்பு நிகழ்ச்சியில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சரும், வடக்கு மாவட்ட திமுக செயலாளருமான கீதா ஜீவன், பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ், மாவட்ட ஆட்சியர் இளம் பகவத், ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா, தென்காசி சட்டமன்ற உறுப்பினர் ராஜா, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, மற்றும் திமுக கழக செயல்வீரர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
துணை முதல்வர் கன்னியாகுமரி மாவட்டத்தில் திமுக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த குமரி மாவட்ட எல்லையான காவல் கிணறு ஜங்ஷனில் வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கு பெறுகிறார்.
பின்னர் மாநில மீனவர் அணி செயலாளர் இல்லத் திருமண விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்திய பின் சாலை மார்க்கமாக மதுரை சென்றடைந்து இரவு மதுரை விமான நிலையத்தில் இருந்து சென்னை செல்கிறார். என்பது குறிப்பிடத்தக்கது.