BREAKING NEWS

பணியின்போது உயிரிழந்த பெண் காவலரின் குடும்பத்தினருக்கு சக காவலர்கள் இணைந்து நிதி உதவி

பணியின்போது உயிரிழந்த பெண் காவலரின் குடும்பத்தினருக்கு சக காவலர்கள் இணைந்து நிதி உதவி

சென்னையில் சாலை விபத்தில் உயிரிழந்த பெண் காவலரின் குடும்பத்திற்கு சக காவலர்கள் சார்பில் திரட்டிய ரூ.25,56,000 நிதி உதவி திண்டுக்கல் மாவட்ட எஸ்பி முன்னிலையில் வழங்கப்பட்டது

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரை சேர்ந்த நித்யா கடந்த 2011-ம் ஆண்டு காவல்துறையில் சேர்ந்து
சென்னையில் காவலராக பணியாற்றி வந்தார் இந்நிலையில் சாலை விபத்தில் நித்யா உயிரிழந்தார்.

இதனையடுத்து காக்கி உதவும் கரங்கள் சார்பாக 2011-ம் ஆண்டு பேட்சை சேர்ந்த அனைத்து மாவட்ட காவலர்கள் சார்பில் ரூ.25,56,000 நிதி திரட்டி இன்று

திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரதீப், நித்யாவின் தாய் மற்றும் குடும்பத்தினருக்கு ரூ.25,56,000 வழங்கினார் இந்நிகழ்வின் போது 2011–ம் ஆண்டு பேட்ச் காவலர்கள் உடன் இருந்தனர்.

CATEGORIES
TAGS