“பூண்டி புஷ்பம் கல்லூரி வரலாற்றுத் துறை பேராசிரியர் டாக்டர். S. பிரபாகரன் கடந்த கல்வியாண்டில் 18 விருதுகள் பெற்று சாதனை”.

தஞ்சை அருகே உள்ள பூண்டி ஸ்ரீ புஷ்பம் கல்லூரியின் வரலாற்றுத் துறை பேராசிரியர் டாக்டர். S. பிரபாகரன் அவர்கள் கடந்த கல்வி ஆண்டான 2020- 2021-ல் கல்விப்பணியில் சிறந்து விளங்கியதற்காக தேசிய மற்றும் பன்னாட்டு அளவிலான 18 விருதுகளை பெற்று சாதனை புரிந்துள்ளார்.
இக்கல்லூரியின் வரலாற்றுத் துறைத் தலைவராக 2016 இல் இருந்து 2021 வரை பதவி வகித்த இவர், குரோனா லாக்டவுன் காலங்களில் பன்னாட்டு அளவிலான 18 ஆன்லைன் குயிஸ் நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளார். இது, நோய்கள் பற்றிய விழிப்புணர்வு, இந்திய மற்றும் உலக வரலாறு, பொது அறிவு போன்றவைகள் பற்றியதாகும். இந்நிகழ்ச்சிகளில், இந்தியா, இலங்கை, மலேசியா, அமெரிக்கா, சிங்கப்பூர், சவுத் கொரியா, சவுதி அரேபியா போன்ற நாடுகளை சார்ந்த மாணவர்கள் மற்றும் ஆர்வலர்கள் பங்கேற்று சான்றிதழ்கள் பெற்றனர். இதன் காரணமாக, இவருக்கு 5 ஆராய்ச்சி நிறுவனங்கள், “சிறந்த துறைத்தலைவர் விருது- 2021” (5 விருதுகள்) கொடுத்து கௌரவித்தனர்.
இது தவிர, “இந்திய- ஆசிய வரலாற்றாளர் விருது”, “சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் விருது”, “மகாத்மா காந்தி விருது”, “ஆசியா சிறப்பு விருது”, “சர்வதேச ஆசிரியர் சிறப்பு விருது”, “100 கல்வியாளர் விருது”, “சிறந்த இளம் ஆசிரியர் விருது”, “இந்தோ- ஆசியா ஆசிரியர் சிறப்பு விருது”, “சிறந்த ஆசிரியர் விருது”, “சர்வதேச ஆசிரியர் விருது”, போன்ற விருதுகளை சென்ற கல்வி ஆண்டில் பெற்றுள்ளார். மேலும், குறுகிய காலத்தில் 18 விருதுகளை பெற்றதன் காரணமாக “இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ்” சாதனை புத்தகத்திலும் இடம் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இக் கல்லூரியின் தலைவர் டாக்டர். T. கிருஷ்ணசாமி வாண்டையார் அவர்கள், கடந்த கல்வியாண்டில் 18 விருதுகளை பெற்று சிறந்து விளங்கிய டாக்டர். எஸ். பிரபாகரன் அவர்களை வாழ்த்தினார். இதேபோல், இக்கல்லூரியின் செயலர் மற்றும் தாளாளர் திரு. A. பாலசுப்பிரமணிய வாண்டையார் அவர்கள் தனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார்.
