10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அகில பாரத மக்கள் சக்தி இயக்கம் சார்பில் குடியாத்தத்தில் கண்டன ஆர்ப்பாட்டம்!

குடியாத்தம் அரசு தலைமை மருத்துவமனையில் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும். பிச்சனூர் கங்காதர சுவாமி நடுநிலைப் பள்ளியை உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்த வேண்டும். கைத்தறி நெசவாளர்களுக்கு குறைந்த கூலி வழங்கும் தனியார் முதலாளிகளை கண்டிக்கிறோம். அம்பேத்கர் சிலை அருகே உள்ள டாஸ்மாக் மதுக்கடையை உடனடியாக அகற்ற வேண்டும் தனியார் பள்ளிகளின் (பிரம்மாஸ்) கல்வி கட்டண உயர்வை உடனடியாக தடுத்து நிறுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
குடியாத்தம் நகரில் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பொன்னம்பட்டி கிராமத்தில் 30 வருடமாக உள்ள குடிநீர் பிரச்சனையை தீர்க்க வழிவகை காண வேண்டும். சீவூர் பஞ்சாயத்து கள்ளூர் கிராமம் குறிஞ்சி நகர் சுற்றியுள்ள பகுதிகளில் கால்வாய் அமைக்க வேண்டும் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அகில பாரத மக்கள் சக்தி இயக்கம் சார்பில் குடியாத்தம் பழைய பேருந்து நிலையம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் 22.6.2026 மாலை 4 மணி அளவில் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாநில தலைவர் ராம.சரவணன் தலைமை வகித்தார். மாநில துணைத்தலைவர் கிருஷ்ணமூர்த்தி, மாநில செயலாளர் வினோத்குமார், மாவட்ட வழக்கறிஞர் பிரிவு செயலாளர் சங்கோல், நகர தலைவர் சங்கர், நகர செயலாளர் கஜேந்திரன், நகர சக்தி மாநகர தலைவர் மகேஸ்வரி, நகர இளைஞர் அணி செயலாளர் வினோத்குமார், ஒன்றிய தலைவர் கோபி, ஒன்றிய செயலாளர் யுவராஜ், ஒன்றிய மகளிர் அணி தலைவர் நளினி, ஒன்றிய செயலாளர் கோகுல்ராஜ் முன்னிலை வகித்தனர்.
மாவட்ட செயலாளர் ,கைத்தறி காவலன் எஸ் .ரமேஷ் வரவேற்றார். அகில பாரத மக்கள் இயக்கத்தின் நிறுவனர் கார்த்திக் ஜி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார். இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் வழக்கறிஞர்கள் சம்பத்குமார், ரமேஷ் குமார், உறுதிமொழி ஆணையர் எம். குமார், வழக்கறிஞர்கள் கோபி, சமூக ஆர்வலர் நாராயணன், பிரவீன் குமார், செங்குன்றம் பாலாஜி மற்றும் பலர் திரளாக கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர். இந்த கண்டன ஆர்ப்பாட்டம் மக்கள் நலன் ,சமூக நீதி உரிமைகளை வென்றெடுக்க பொதுமக்கள் கைத்தறி விசைத்தறி தொழிலாளர்கள் சமூக ஆர்வலர்கள், பெற்றோர்கள் என அனைவரும் வருகை தந்து இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு சிறப்பித்தனர். மக்கள் நலனுக்காக, சமூக நீதிக்காக உரிமைகளை வென்றெடுக்க இந்த கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
இந்த ஆர்ப்பாட்டம் முறையாக குடியாத்தம் நகர காவல் நிலையத்தில் முன் அனுமதி பெற்று நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டம் நடந்து கொண்டிருந்த வேளையிலேயே பிரம்மாஸ் பள்ளிகளின் தாளாளர் அங்கு காரில் வருகை தந்தார்.
அங்கு கண்டன ஆர்ப்பாட்டத்தை செய்தி மற்றும் புகைப்படம், ஒளிப்பதிவு செய்து கொண்டிருந்த செய்தியாளர்களை அழைத்துச் சென்று அவர் தனியாக பேட்டி அளிக்கிறேன் என்று சொல்லி, ஒரு பெற்றோரும் இதற்கு இசைவு தெரிவிக்கவில்லை, ஒரு தனிநபர் மட்டும் தன்னிச்சையாக இந்த ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்து நடத்துகிறார் என்று அவர் மீது குற்றம் சாட்டினார்.
முறையாக காவல் துறையினரிடம் முன் அனுமதி பெற்று நடைபெறும் ஆர்ப்பாட்டத்திற்கு இடையில் இப்படி ஒரு சம்பந்தப்பட்ட நபர் நேரில் வந்து இப்படி நடந்து கொண்டது சட்டம் ஒழுங்கு சீர்கெடுவதற்கு வழி வகுத்தது. அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசாரும் எதையும் கண்டு கொள்ளாமல் அமைதி காத்தது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து உரிய விசாரணை நடத்தி ஆர்ப்பாட்டம் நடந்த போது இடையூறு ஏற்படுத்தியவர் மீது சட்ட ரீதியாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது அகில பாரத மக்கள் சக்தி இயக்கத்தின் ஒரே கோரிக்கையாக தற்போது மாறி உள்ளதும் குறிப்பிடத்தக்கது. ரமேஷ் நன்றி கூறினார்.
செய்தி ஆசிரியர் ச.வாசுதேவன்
