BREAKING NEWS

“பிரபல ஹீரோவை இயக்குவது உண்மைதான்” -நடிகரும் இயக்குநருமான சமுத்திரக்கனி

பிரபல ஹீரோவை இயக்குவது உண்மைதான்” -நடிகரும் இயக்குநருமான சமுத்திரக்கனி.

ட்விட்டரில் ட்ரெண்ட் ஆகும் சமுத்திரக்கனி! தேவையா இந்தக் காழ்ப்பு? |  samuthirakani - hindutamil.in

பிரபல ஹீரோவை இயக்குவது உண்மைதான்” என்று நடிகரும் இயக்குநருமான சமுத்திரக்கனி தெரிவித்தார்.

சமுத்திரக்கனி இயக்கத்தில் தம்பி ராமையா, ஜெயப்பிரகாஷ், முனீஸ்காந்த் உட்பட பலர் நடித்த படம், ’விநோதய சித்தம்’ . விமர்சன ரீதியாக பாராட்டுகளைப் பெற்ற இந்தப் படம், ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியானது. இந்தப் படம் இப்போது தெலுங்கில் ரீமேக் ஆகிறது. பவன் கல்யாண் நாயகனாக நடிக்கிறார். தம்பி ராமையா கேரக்டரில், பவனின் மருமகன் சாய் தரம் தேஜ் நடிக்கிறார். இந்தப் படத்தை சமுத்திரக்கனி இயக்கவுள்ளார்.

தெலுங்கில் பிசியாக நடித்து வரும் சமுத்திரக்கனி, முன்னணி நடிகர்கள் படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார். சமீபத்தில் வெளியான, மகேஷ்பாபுவின் ’சர்க்காரு வாரி பாட்டா’ படத்திலும் நடித்திருந்தார். இந்நிலையில் தெலுங்கில் படம் இயக்குவதை அவர் உறுதிப்படுத்தி இருக்கிறார்.

’விநோதய சித்தம்’ படத்தை அவர் ரீமேக் செய்கிறார். இதில் பிரபல தெலுங்கு ஹீரோ பவன் கல்யாண் நாயகனாக நடிக்கிறார். ’ரசிகர்கள் நல்ல செய்தியை விரைவில் எதிர்பார்க்கலாம். நானும் பவன் கல்யாணின் ரசிகர் என்பதால் ரசிகர்களின் எதிர்பார்ப்பை மனதில் வைத்து அவர் நடிக்கும் படத்தை இயக்குவேன்’ என்று தெரிவித்துள்ளார் சமுத்திரக்கனி.

 

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

Share this…

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )