அரசு ஊழியர்களுக்கு செக்!! உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!!
அரசு ஊழியர்களுக்கு செக்!! உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!!

தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கு பல சலுகைகள் வழங்கப்பட்டு வருகின்றன. அவர்களுக்கு சீனியாரிட்டி அடிப்படையில் பதவி உயர்வு வழங்கப்பட்டு வருகிறது. இதனால் திறமை உள்ளவர்களுக்கு வாய்ப்புக்கள் மறுக்கப்படுகின்றன என தொடர்ந்து அரசு அலுவலகங்களில் இருந்து புகார்கள் எழுந்து வந்தன. அத்துடன் TNPSC தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெற்று பணியில் சேர்ந்த அரசு ஊழியர்கள் பலர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கின் விசாரணைக்கு பிறகு 2015ம் ஆண்டு தமிழ்நாடு மாநில சார்நிலைப் பணி விதிகளின் படி TNPSC தேர்வு மதிப்பெண் ரேங்க் அடிப்படையில் பதவி உயர்வு வழங்க வேண்டும் என்று தீர்ப்பு அளித்துள்ளது. இது குறித்து தமிழக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவும் உச்சநீதிமன்றத்தில் கடந்த ஆண்டு தள்ளுபடி செய்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் கடந்த மாதம் நடைபெற்ற சட்டப்பேரவை கேள்வி நேரத்தில் மனிதவளத் துறை அமைச்சர் அரசு ஊழியருக்கு பதவி உயர்வு அதே அலுவலகத்தில் வழங்க கூடாது. அவர்கள் பணிமாற்றத்துடன் கூடிய பதவி உயர்வே வழங்கப்பட வேண்டும். ஆனால் அந்த விதிகள் தமிழகத்தில் பின்பற்றப்படுவது இல்லை எனக் குறிப்பிட்டுள்ளார்.

திமுக ஆட்சியில் அது மாற்றம் செய்யப்படும் என தெரிவித்துள்ளார். தமிழகத்தில் ஒருவருக்கு அரசு பணி வழங்கினால் பணி ஆணை பெற்றதிலிருந்து ஓராண்டிற்கு பணியிடை மாறுதல் செய்ய கூடாது எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இந்நிலையில் அரசு ஊழியர்கள் பதவி உயர்வை உரிமையாக கோர முடியாது என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. அத்துடன் பதவி உயர்வு சட்டத்தின் அடிப்படையில் அனைத்து பதவி உயர்வுகளும் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் எனவும் அறிவித்துள்ளது.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
