கோபிசெட்டிபாளையத்தில் தனியார் பள்ளி வாகனங்கள் குறித்து கோட்டாச்சியர் தலைமையில் ஆய்வு நடைபெற்றது .

தமிழகத்தில் கோடை விடுமுறையையடுத்து வருகிற 13ம் தேதி பள்ளிகள் திறக்கப்படுகிறது இந்நிலையில் தனியார் பள்ளி குழந்தைகளை அழைத்து செல்லும் பள்ளி வாகனங்களின் தன்மை குறித்து ஆய்வு செய்த பின்னரே பள்ளி வாகனங்களில் குழந்தைகளை அழைத்து செல்ல அனுமதிக்கப்படுகிறது.

இதனடிப்படையில் ஈரோடுமாவட்டம் கோபிசெட்டிபாளையம் வட்டார போக்குவரத்து அலுவலக எல்லைக்குட்பட்ட கோபி, சத்தியமங்கலம், பவானி, அந்தியூர் பகுதிகளில் உள்ள 105 தனியார் பள்ளிகளை சேர்ந்த 609 பள்ளி வாகனங்கள் ஆய்வினை கோபி கோட்டாச்சியர் திவ்யபிரியதர்ஷினி தலைமையில் வட்டார போக்குவரத்து அலுவலர் முனுசாமி மோட்டார் வாகன ஆய்வாளர்கள் கண்ணன், சுகந்தி, போக்குவரத்து காவல் ஆய்வாளர் சஜினி ஆகியோர் கொண்ட குழு புதிய வாகன சட்ட விதிகளின் படி ஆய்வு மேற்கொண்டனர்

ஆய்வின்போது பள்ளி வாகனங்களில் முதலுதவிபெட்டி, தீ அணைப்பான், வேக்கட்டுப்பாட்டு கருவி, ஜபிஆர்எஸ் கருவி, சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டுள்ளனவா என்றும் வாகனத்தில் குழந்தைகள் ஏறி செல்லும் படியின் உயர அளவுகள், அவசரகால வழி, உள்ளிட்டவைகள் சரியான அளவுகளில் உள்ளனவா என்று கோட்டாச்சியர் திவ்யபிரியதர்ஷினி தலைமையில் ஆய்வு மேற்கொண்டனர் மேலும் பள்ளி வாகனங்களின் ஆவணங்கள் புதுப்பித்து உள்ளது உள்ளிட்ட அனைத்தும் சரியான முறையில் உள்ள பள்ளி வாகனங்கள் அனைத்திற்கும் புதிய முறையில் வட்டார போக்குவரத்து அலுவலகத்தால் வழங்கப்படும் ஓட்டுவில்லையை கோட்டாச்சியர் வாகனங்களுக்கு வழங்கி ஓட்டுனர்களுக்கு பல்வேறு அறிவுறைகள் வழங்கினார் அப்போது.

பள்ளி குழந்தைகளை பள்ளிக்கு அழைத்து செல்லும்போது அவசர கதியில் வாகனத்தை இயக்க வேண்டாம் குறைந்தது 10நிமிடத்திற்கு முன்பாகவே சென்று பொருமையாக குழந்தைளை பள்ளிக்கு அழைத்து வரவேண்டும் மாலையில் குழந்தைகள் அழைத்துசெல்லும்போது வீட்டில் இறங்கி விட்டார்களா என உறுதி செய்த பின்னர் வாகனத்தை இயக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்.
