திருச்சி மத்திய சிறை வளாகத்தில் குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டு கைதாகி தங்க வைக்கப்பட்டுள்ள இலங்கை தமிழர்கள் தங்களை விடுதலை செய்ய கோரி 19 ஆவது நாளாக தொடர் உண்ணாவிரத போராட்டம்.

திருச்சி கொட்டப்பட்டு மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள இலங்கை அகதிகள் (தண்டனை குற்றவாளிகள்) தங்களுக்கான தண்டனை காலம் முடிந்த பின்னரும் தங்களை விடுவிக்காமல் சிறப்பு முகாமில் வைத்திருப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் தங்களை உடனடியாக விடுதலை செய்ய வலியுறுத்தியும் 17நபர்கள் தொடர்ந்து 19 ஆவது நாளாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.



இதில் உடல்நிலை மிகவும் மோசமான கொன்பிசியஸ் மற்றும் டிலக்ஷன் திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் தற்போது தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.



மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள இலங்கை தமிழர்களை விரைவாக விடுதலை செய்ய வேண்டும் என்று நாம் தமிழர் கட்சி, தமிழக வாழ்வுரிமை கட்சி உள்ளிட்ட அரசியல் கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
