BREAKING NEWS

பாபநாசம் பொதிகை அறிவுத் திருக் கோவில் வளாகம் பாபநாசம் தலையணைசாலை வீதி வளாகத்திலிருந்து நிறைய குப்பைகள் பிளாஸ்டிக் டம்ளர்கள் மற்றும் எச்சில் இலைகள் போன்றவற்றை நகராட்சி அதிகாரிகளும் கவனிக்குமா ?

பாபநாசம் பொதிகை அறிவுத் திருக் கோவில் வளாகம் பாபநாசம் தலையணைசாலை வீதி வளாகத்திலிருந்து நிறைய குப்பைகள் பிளாஸ்டிக் டம்ளர்கள் மற்றும் எச்சில் இலைகள் போன்றவற்றை நகராட்சி அதிகாரிகளும் கவனிக்குமா ?

பாபநாசம் பொதிகை அறிவுத் திருக் கோவில் வளாகம் பாபநாசம் தலையணைசாலை வீதியில் அமைந்துள்ளது. இவ்வளாகத்தின் பக்கத்தில் வக்ஃப் வாரிய கட்டிடத்தை காண்டிராக்ட் மூலம் பராமரித்து வருகிறார்கள்.

 

 

அக்கட்டிட வளாகத்திலிருந்து நிறைய குப்பைகள் பிளாஸ்டிக் டம்ளர்கள் மற்றும் எச்சில் இலைகள் போன்றவற்றை அறிவுத் திருக் கோவில் வளாகத்தினுள் போடுகிறார்கள். பலமுறை பராமரிப்பாளரிடம் எடுத்துக் கூறியும் மோதல் போக்கினை பின்பற்றுகிறார்கள்.

 

எங்கள் வளாகத்தில் தியானம் யோகா மற்றும் பல்கலைக் கழக யோகா வகுப்புகள் நடந்து வருகிறது. வருகை தருகின்ற அன்பர்களுக்கு அசுத்தமாகம் சுகாதாரக் கேடாகவும் தொற்று நோய் பரவுவதற்கு காரணமாகவும் அமைகின்றது. ஏற்கனவே விக்கிரமசிங்கபுரம் நகராட்சி சுகாதார அலுவலரிடம் தெரிவித்து அவர் நேரில் வந்து சம்பந்தப்பட்டவர்களுக்கு அறிவுரை கூறியும் அதனை பின்பற்றாமல் இது நாள் வரை நடந்து கொண்டிருக்கின்றார்கள்.

 

 

எனவே இந்த விஷயத்தில் விக்கிரம சிங்கபுரம் நகராட்சி அதிகாரிகளும் மற்றும் காவல் துறை அதிகாரிகளும் தலையிட்டு எங்களுடைய வளாகத்தை சுத்தமாக வைப்பதற்கு‌ தேவையான உதவி செய்யுமாறும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறும் அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். வாழ்க வளமுடன்.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )