BREAKING NEWS

நாம் தமிழர் கட்சி சார்பில் ஜி.எஸ்.டி. மின் கட்டண உயர்வு, அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றம், சட்ட திட்டங்களை திரும்ப பெற வேண்டி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

நாம் தமிழர் கட்சி சார்பில் ஜி.எஸ்.டி. மின் கட்டண உயர்வு, அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றம், சட்ட திட்டங்களை திரும்ப பெற வேண்டி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஈரோடு வடக்கு மாவட்ட பொருளாளர் முருகேசன் தலைமை வகித்தார். பவானி தொகுதி இணைச்செயலாளர் பிரதாப் குமார் முன்னிலை வகித்தார். இதில், சிறப்பு அழைப்பாளர்களாக மாநில ஆளுமை கட்டமைப்பு பொறுப்பாளர் சீதாலட்சுமி, திருப்பூர் நாடாளுமன்ற பொறுப்பாளர் மற்றும் மாநில ஆளுமை கட்டமைப்பு குழு பொறுப்பாளர் வான்மதி வேலுச்சாமி, மாநில மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளர் சத்யா முருகேசன்,

 

 

திருப்பூர் வடக்கு மாவட்ட செயலாளர் சிவக்குமார், திருப்பூர் தெற்கு மாவட்ட தலைவர் மனோகரன் ஈரோடு நாடாளுமன்ற பொறுப்பாளர் மற்றும் ஈரோடு கிழக்கு மாவட்ட தலைவர் நவநீதன், ஈரோடு மேற்கு மாவட்ட தலைவர் விசய் மேத்யூ, ஈரோடு மேற்கு தொகுதி இணைச் செயலாளர் மூர்த்தி, மொடக்குறிச்சி சட்டமன்றத் தொகுதி செயலாளர் சந்திரசேகர் அந்தியூர் தொகுதி இணைச் செயலாளர் ரூபன் குமார், கோபி சட்டமன்ற தொகுதியின் துணைச் செயலாளர் லட்சுமி நாராயணன்,

 

முன்னாள் தெற்கு மாவட்ட பொருளாளர் காமாட்சி பிரபு ஆகியோர் கலந்துகொண்டு கண்டன உரை ஆற்றினர். மேலும் இந்த ஆர்ப்பாட்டத்தில் பவானி தொகுதி அனைத்து நிலை மகளிர் பாசறை பொறுப்பாளர்கள் பவானி நகரம் மற்றும் ஒன்றிய பொறுப்பாளர்கள் அம்மாபேட்டை வடக்கு ஒன்றிய பொறுப்பாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )