நெல்லை மாவட்டம் சுத்தமல்லி ஊராட்சிக்குட்பட்ட வவுசி நகர் பகுதிகளில் அடிப்படை தேவைகளான சாலை, தெருவிளக்கு குடிநீர், போன்ற வசதிகளை ஊராட்சி நிர்வாகம் செய்து தரக்கோரி எஸ்டிபிஐ கட்சி சுத்தமல்லி பகுதியின் சார்பாக ஊராட்சி மன்ற அலுவலகம் முற்றுகை போராட்டம் நடைபெற்றது.

இந்நிகழ்விற்கு எஸ்டிபிஐ கட்சியின் சுத்தமல்லி பகுதி தலைவர் ஷேக் முகமது பயாஸ் தலைமை வகித்தார். பகுதி செயலாளர் ஜாகிர் உசேன், பொருளாளர் பீர்முகமது, ஆறாவது வார்டு தலைவர் சையத் அலி, மாவட்ட விரிவாக்கத் துறை தலைவர் ரிபாயி, நெல்லை மாநகராட்சி பேட்டை 20 வது வார்டு தலைவர் ஜெய்லானி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.நெல்லை மாநகர் மாவட்டச் செயலாளர் பேட்டை முஸ்தபா சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி உரையாற்றினார். உடல்ரீதியாக கீழ்கண்ட கோரிக்கைகள் அடங்கிய கோரிக்கை மனு வழங்கப்பட்டது.
கோரிக்கைகள்

1. வ உ சி நகர் 18வது தெரு குண்டும் குழியுமாக கற்கள் பெயர்ந்த நிலையில் நடந்து செல்ல முடியாத அளவிற்கு உள்ளது. ஜீவா நகர் ரேஷன் கடைக்கு செல்லக்கூடிய ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் அந்த வழியாகத்தான் கடக்க வேண்டியுள்ளது.எனவே உடனடியாக வ உ சி நகர் 18வது தெரு மற்றும் 5 குறுக்கு தெருக்களில் சாலை அமைத்து தருமாறு கேட்டுக்கொள்கிறோம்.
2. பர்வீன் நகர் பகுதியில் சாலைகள் எதுவும் இன்றி பள்ளமும் மேடுமாக உள்ள பகுதிகளை சரிசெய்து மக்கள் பயன்பாட்டுக்கு ஏற்ற வகையில் சாலை அமைத்து தருமாறு கேட்டுக்கொள்கிறோம்.
3.வ உ சி நகர் 10வது தெருவிலிருந்து எஸ் கே நகர் செல்லும் சாலை குண்டும் குழியுமாக கற்கள் பெயர்ந்து மோசமான நிலையில் உள்ளது. ஆஞ்சநேயர் கோவில் சர்ச் போன்ற பகுதிகளுக்கு செல்வோர் அந்த பாதையை பயன்படுத்துவதால் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர். எனவே அந்த சாலையை உடனடியாக சரி செய்து தருமாறு கேட்டுக்கொள்கிறோம்.

4.சுத்தமல்லி காவல் நிலையம் வழியாக கோபாலசமுத்திரம் சாலையை இணைக்கும் சாலையை புதிய சாலை அமைப்பதற்கு ஒப்பந்தம் கொடுக்கப்பட்டு பணிகள் நடைபெறாமல் உள்ளது. எனவே உடனடியாக மேற்கண்ட சாலை பணிகளை ஆரம்பிக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
5.வ உ சி நகர் 9வது தெருவில் பிள்ளையார் கோவில் பின்புறம் உள்ள சின்டெக்ஸ் தொட்டி மோட்டார் பழுதடைந்து பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. உடனடியாக அதை சரி செய்து தருமாறு கேட்டுக்கொள்கிறோம்
6.வ உ சி நகர் சுற்றுவட்டாரப்பகுதிகளில் தெரு விளக்குகள் இல்லாமல் இருள் சூழ்ந்து இருக்கும் இடங்களில் தெரு விளக்குகள் அமைத்து தர உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
7.சுத்தமல்லி ஊராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் வீட்டு குடிநீர் இணைப்பு வழங்கியுள்ள நிலையில் வ.உ.சி நகரில் பல வருடங்களாக வீட்டுக் குடிநீர் இணைப்பு வழங்கப்படாமல் உள்ளது. எனவே உடனடியாக வீட்டுக் குடிநீர் இணைப்பு வழங்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
