மேயர் சண் ராமநாதன் மரக்கன்று நட்டு வைத்தார்

தஞ்சை மாநகராட்சி மேயர் சண். ராமநாதன் நம்ம வார்டு நம்ம மேயர் என்ற திட்டத்தின் கீழ் மாநகராட்சியில் உள்ள ஒவ்வொரு வார்டுக்கும் தினமும் சென்று ஆய்வு நடத்தி வருகிறார். அங்கு பொது மக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்று பரிசீலித்து நடவடிக்கை எடுத்து வருகிறார்.
இந்த நிலையில் தஞ்சை பூக்கார தெரு விளார் சாலையில் உள்ள மாரிக்குளம் நந்தவனத்தில் தமிழ்நாடு நகர்ப்புற வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் நடைபெற்ற விழாவில் மரக்கன்று நட்டு வைத்தார். மொத்தம் 50 மரக்கன்றுகள் நட்டு வைக்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் கவுன்சிலர்கள் ரம்யா சரவணன், கன்னுக்கிணியாள், மாநகராட்சி உதவி பொறியாளர் சந்திரபோஸ், துப்புரவு ஆய்வாளர் மோகனப்பிரியா, கேலக்ஸி ரோட்டரி சங்கம் உதவி ஆளுநர் மண்டலம் 20 மிஷேல்தாஸ், கேலக்ஸி ரோட்டரி சங்கத் தலைவர் எட்வர்ட் ஜெயராஜ், கேலக்ஸி ரோட்டரி சங்க செயலாளர் செந்தில்குமார், பொருளாளர் சுரேஷ், அன்னதானத் திட்ட தலைவர் வினோத்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
