BREAKING NEWS

கோவில்பட்டி அருகே நேற்று வெட்டி படுகொலை செய்யப்பட்ட ஊராட்சி மன்ற தலைவரின் உடலுக்கு கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.

கோவில்பட்டி அருகே நேற்று வெட்டி படுகொலை செய்யப்பட்ட ஊராட்சி மன்ற தலைவரின் உடலுக்கு கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே திட்டங்குளம் ஊராட்சி மன்ற தலைவர் பொன்ராஜ்(63) நேற்று மர்ம நபர்களால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார் இந்நிலையில் அவரது உடல் உடற்கூறு ஆய்வு செய்யப்பட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அவரது உடலை உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. உடலை மருத்துவமனையில் இருந்து ஊர்வலமாக அவரது ஊரான திட்டங்குளத்திற்கு எடுத்துச் சொல்லப்பட்டது.

 

ஊராட்சி மன்ற தலைவர் பொன்ராஜ் உடலுக்கு முன்னாள் அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.இதில் ஒன்றிய செயலாளர்கள் அன்புராஜ்,வண்டானம் கருப்பசாமி, ஆவின் கூட்டுறவு சங்க தலைவர் தாமோதரன், நகர்மன்ற உறுப்பினர்கள் கவியரசன், செண்பக மூர்த்தி, ஒன்றிய அம்மா பேரவை செயலாளர் சாமி ராஜ், வழக்கறிஞர் அணி மாவட்ட செயலாளர் சிவபெருமாள், எட்டையாபுரம் நகர செயலாளர் ராஜகுமார், முன்னாள் ஒன்றிய செயலாளர் போடு சாமி, பழனி குமார்,கோபி,முருகன், விநாயகம், விடுதலை சிறுத்தை கட்சி வடக்கு மாவட்ட செயலாளர் கதிரேசன், உள்ளிட்டோர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.

Share this…

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )