BREAKING NEWS

மாணவியைப் பாலியல் வல்லுறவு செய்த இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை

மாணவியைப் பாலியல் வல்லுறவு செய்த இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை

மாணவியைப் பாலியல் வல்லுறவு செய்த இளைஞருக்கு தஞ்சாவூர் நீதிமன்றம் புதன்கிழமை 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது.

தஞ்சாவூர் மாவட்டம், பூதலூர் அருகேயுள்ள வெண்டயம்பட்டி காட்டுத்தெருவைச் சேர்ந்தவர் வீரையன் மகன் தீனதயாளன் (30). இவர் 2018 ஆம் ஆண்டு செங்கிப்பட்டி அருகே மனையேறிப்பட்டி பகுதியில் பள்ளியிலிருந்து இரு சக்கர வாகனத்தில் திரும்பிக் கொண்டிருந்த 15 வயதுடைய 10 ஆம் வகுப்பு மாணவியை மடக்கி கத்தியைக் காட்டி மிரட்டி, காட்டுப் பகுதிக்கு அழைத்துச் சென்று பாலியல் வல்லுறவு செய்தார். மேலும், அவரது இரு சக்கர வாகனத்தில் காற்றையும் பிடுங்கிவிட்டுச் சென்றார்.

அங்கிருந்து மறுநாள் காலை வீட்டுக்குச் சென்ற மாணவி தனது பெற்றோரிடம் விவரத்தைக் கூறினார். இதுகுறித்து திருவையாறு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. இதன் பேரில் காவல் துறையினர் வழக்குப் பதிந்து தீனதயாளனை கைது செய்தனர்.

இது தொடர்பாக தஞ்சாவூர் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டது. இந்த வழக்கை நீதிபதி ஜி. சுந்தரராஜன் விசாரித்து தீனதயாளனுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ. 70,500 அபராதமும் விதித்து புதன்கிழமை தீர்ப்பளித்தார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ. 50,000 இழப்பீடு வழங்கவும் அரசுக்குப் பரிந்துரை செய்தார்.
இச்சிறுமிக்கு ஏற்கெனவே அரசு சார்பில் ரூ. 3 லட்சம் இழப்பீடு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

 

Share this…

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )