மின்சாரத் திருத்த மசோதாவை முழுமையாக திரும்பப்பெறு திருப்பனந்தாளில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கண்டன ஆர்ப்பாட்டம்

விவசாயிகளுக்கு வழங்கப்படும் இலவச மின்சாரத்தை ரத்து செய்யும் மின்சார திருத்த மசோதாவை முழுமையாக திரும்ப பெற வலியுறுத்தியும் நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரியும் விலைவாசி உயர்வு பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை கடும் உயர்வு, வேலையின்மை விவசாய விலைப் பொருட்களுக்கு கட்டுப்படியான விதை உரம் பூச்சி மருந்து போன்ற இடுப்பொருள்களின் விலை உயர்வு விவசாய விரோத சட்டங்கள் கொடுமைகளை எதிர்த்து தமிழ்நாடு விவசாய சங்கம் சார்பில் திருப்பனந்தாள் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு விவசாய சங்க ஒன்றிய தலைவர் கலைமணி தலைமை வகித்தார் ஒன்றிய துணைத் தலைவர் செல்வம் டி.ஜி ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்
விவசாய சங்க பொறுப்பாளர் எஸ் துரைராஜ் மாவட்ட குழு உறுப்பினர் ஜீவபாரதி திருவள்ளுவர் விவசாய நலச்சங்கம் செயலாளர் மாரியப்பன் மாவட்ட துணைத் தலைவர் என்.கணேசன் ஒன்றிய செயலாளர் கொளஞ்சியப்பன் ஒன்றிய பொருளாளர் சாமிக்கண்ணு மணல் மாட்டு வண்டி சங்க தலைவர் கோவிந்தராஜ் உள்ளிட்ட விவசாய சங்கத்தினர் கலந்துகொண்டு கண்டன ஆர்ப்பாட்டம் செய்தனர்.
