கிட்டப்பா மேல்நிலைப் பள்ளியில் 11-ம் வகுப்பு பயிலும் மாணவ மாணவிகளுக்கு அமைச்சர் இரு சக்கர மிதிவண்டி வழங்கி துவக்கி வைத்தார்

மயிலாடுதுறை மாவட்டம், கூறைநாடு கிட்டப்பா நகராட்சி மேல்நிலைப்பள்ளியில், பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் நடைபெற்ற நிகழ்சிசியில் அரசு, அரசு உதவிப்பெறும் மேல்நிலைப்பள்ளிகளில் 11-ம் வகுப்பு பயிலும் 9 பள்ளிகளைச்சேர்ந்த 45 மாணவ. மாணவியர்களுக்கு ரூ.2,32,875 மதிப்பில் மிதிவண்டிகளை மாண்புமிகு சுற்றுச்சூழல், காலநிலை மாற்றத்துறை மற்றும் இளைஞர் நலன் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் வழங்கி துவக்கி வைத்தார்.
மிதிவண்டிகளை மாணவர்களுக்கு மாண்புமிகு சுற்றுச்சூழல், காலநிலை மாற்றத்துறை மற்றும் இளைஞர் நலன் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் அவர்கள் வழங்கி பேசியதாவது:
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் இந்தியாவில் மாநிலங்களிலேயே தமிழ்நாடு மாநிலம் கல்வியில் மிகச் சிறந்த மாநிலமாக உள்ள பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். இலவச கல்வியை கொண்டு வந்தவர் முத்தமிழ் அறிஞர் கலைஞர் ஆவார். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், கல்வித்துறைக்காக ரூ.37 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளார். ஒரு நாளைக்கு 20 மணி நேரம் உழைக்கின்ற முதலமைச்சர் நமது முதலமைச்சர் ஆவார். இல்லம் தேடி கல்வி திட்டம் மகத்தான திட்டமாகும். நான் முதல்வன் திட்டம் மற்றொமொரு சிறப்பான திட்டமாகும். முத்தமிழ் அறிஞர் கலைஞர் கொண்டு வந்த இலவச கல்வியால் தமிழர்கள் இன்று 100 நாடுகளில் வசிக்கின்றனர். அவர்கள் உயர் பதவிகளில் இருக்கின்றனர்.
கிட்டப்பா நகராட்சி மேல்நிலைப் பள்ளியில் நல்லதொரு சுற்றுச்சூழல் இயற்கை எழில் மிகுந்த பள்ளியாகும். நீங்கள் இங்கு படித்து சிறந்த மாணவராக வர வேண்டும். ஒவ்வொரு மாணவரும் கடினமாக உழைக்க வேண்டும். மாணவச் செல்வங்கள் ஆகிய நீங்கள் ஆசிரியர்கள் மீது மிகுந்த மரியாதையும், அன்பும் வைத்திருக்க வேண்டும். கல்வி தான் நமக்கு உரிமையான சொத்து.

மயிலாடுதுறை மாவட்டத்தில் 2021-2022-ம் கல்வியாண்டிற்கு அரசு, அரசு உதவிப்பெறும் மேல்நிலைப்பள்ளிகளில் 11-ம் வகுப்பு பயின்று வரும் மாணவ, மாணவிகளுக்கு மிதிவண்டிகள் வழங்கப்படுகிறது.
அதன்படி மயிலாடுதுறை மாவட்டத்தில் 2021-2022-ம் கல்வியாண்டில், மயிலாடுதுறை சட்டமன்ற தொகுதியில் உள்ள 14 பள்ளிகளை சேர்ந்த 1331 மாணவர்களுக்கும், 1631 மாணவிகளுக்கும் என 2962 மாணவர்களுக்கு ரூ.1,50,29,877 மதிப்பிலும், பூம்புகார் சட்டமன்ற தொகுதியில் உள்ள 21 பள்ளிகளை சேர்ந்த 1460 மாணவர்களுக்கும், 1684 மாணவிகளுக்கும் என 3144 மாணவர்களுக்கு ரூ.1,59,62.028 மதிப்பிலும், சீர்காழி சட்டமன்ற தொகுதியில் உள்ள 17 பள்ளிகளை சேர்ந்த 1269 மாணவர்களுக்கும், 1292 மாணவிகளுக்கும் என 2561 மாணவர்களுக்கு ரூ.1,30,16,739 மதிப்பிலும் மிதிவண்டிகள் வழங்கப்படுகிறது.
இவற்றில் மொத்தம் 4,060 மாணவர்களுக்கும், ரூ.2.10.10.500 மதிப்பில் மிதிவண்டிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 4.607 மாணவிகளுக்கும் ரூ.2,29,98,144 மதிப்பில் மிதிவண்டிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆக மொத்தம் 52 பள்ளிகளை சேர்ந்த 8667 மாணவ, மாணவிகளுக்கு ரூ.4.40,08.644 (ரூபாய். நான்கு கோடியே நாற்பது இலட்சம்) மதிப்பில் மிதிவண்டிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி 9 பள்ளிகளைச் சேர்ந்த 45, மாணவ, மாணவிகளுக்கு ரூ.2,32,875 மதிப்பில் மிதிவண்டிகள் வழங்கப்படுகிறது. இவ்வாறு மாண்புமிகு சுற்றுச்சூழல், காலநிலை மாற்றத்துறை மற்றும் இளைஞர் நலன் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் பேசினார்.

இந்நிகழ்ச்சியில் பூம்புகார் சட்ட மன்ற உறுப்பினரும், நாகை வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளருமான நிவேதா எம்.முருகன், சீர்காழி சட்ட மன்ற உறுப்பினர் எம்.பன்னீர்செல்வம், மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ராஜகுமார், மாவட்ட ஊராட்சிக்குழுத்தலைவர் மங்கை உமா மகேஸ்வரி சங்கர், மாவட்ட வருவாய் அலுவலர் சோ.முருகதாஸ், மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் அ.ரேணுகா, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் முத்தமிழ்செல்வன், மயிலாடுதுறை நகர் மன்ற தலைவர் என்.செல்வராஜ், மயிலாடுதுறை ஒன்றியக்குழுத் தலைவர் காமாட்சிமூர்த்தி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஜெகவீரபாண்டியன், தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள் மற்றும் பலர் கலந்துக்கொண்டனர்.
