BREAKING NEWS

பத்தமடையில் விமன்ஸ் இந்தியா முமெண்டின் நெல்லை புறநகர் மாவட்ட பொதுக்குழு

பத்தமடையில் விமன்ஸ் இந்தியா முமெண்டின் நெல்லை புறநகர் மாவட்ட பொதுக்குழு

பத்தமடையில் விமன்ஸ் இந்தியா முமெண்டின் நெல்லை புறநகர் மாவட்ட பொதுக்குழு முன்னால் துணை தலைவர் கல்லிடை பீர்பாத்து தலைமையில் நடைபெற்றது. இதில் அடுத்த மூன்றாண்டுக்கான நெல்லை புறநகர மாவட்ட நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கபட்டது. இதில் சிறப்பு அழைப்பாளராக எஸ்டிபிஐ கட்சியின் நெல்லை புறநகர் மாவட்ட தலைவர் எம்.கே பீர் மஸ்தான், அமைப்பு பொதுச்செயலாளர் எம்.எஸ் சிராஜ் துணை தலைவர் முல்லை மஜித், மாவட்ட செயலாளர் கல்லிடை சுலைமான் ஆகியோர் கலந்து கொண்டனர். விமன்ஸ் இந்தியா முமெண்டின் தமிழ் மாநில செயலாளர் ரஹ்மத்நிஷா தேர்தல் அதிகாரியாக நியமிக்கப்பட்டு தேர்தலை நடத்தினார்கள். அவர்கள் முன்னிலை நெல்லை புறநகர் மாவட்டத்தின் விமன்ஸ இந்தியா முமெண்டின் கடந்த கால ஆண்டு அறிக்கை விவாதிக்கப்பட்டது மேலுல் 2022 முதல் 2025ஆண்டுக்கான புதிய நிர்வகிகளை தேர்ந்தெடுத்து நெல்லை புறநகர் மாவட்ட விமன்ஸ் இந்தியா முமெண்டின் தலைவராக சகோதரி மும்தாஜ் ஆலிமா தோந்தெடுக்கப்பட்டார். துணை தலைவராக கல்லிடை பீர்பாத்து , மற்றும் பொதுச்செயலாளராக செய்யது நிஷா ஷாஜிதா, மாவட்ட செயலாளராக தூலுக்கரப்பட்டி வார்டு கவுன்சிலர் லைத்துல் அதிகா நர்கிஸ் பானு பொருளாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார்கள், மாவட்ட செயற்குழு உறுப்பினர்களாக பர்வின், பக்கிராள் ஜன்னத், பாத்திமா ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். மேலும் புதிய மாவட்ட தலைவர் மும்தாஜ் ஆலிமா தலைமையில் மாவட்ட செயற்குழு நடைபெற்றது. இதில் ஏர்வாடி பேரூராட்சி கழக 1வது வார்டு கவுன்சிலர் ந. ஜன்னத் ஆலிமா B.Sc அவர்களுக்கும், 5வது வார்டு கவுன்சிலர் ஹலிமா அவர்களுக்கும், தூலுக்கரப்பட்டி வார்டு கவுன்சிலர் லைத்துல் அதிரா அவர்களுக்கு தேர்தலில் அயராது உழைத்து வெற்றி பெற்றமைக்காக கௌரவிக்கும் விதமாகவும் கட்சியின் சார்பாக நினைவு பரிசினை வழங்கினார்கள் பின்பு கிழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. அம்பை நெடுஞ்சாலை பணியை உடனடியாக முடிக்க வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது. போதை வஸ்துகளுக்கு அடிமையாகும் மாணவ மாணவியரை பாதுகாக்கும் பொருட்டு விழிப்புணர்வு கூட்டம் நடத்த வேண்டும் என தீர்மானிக்கப்பட்ட க இறுதியாக மாவட்ட பொதுசெயலாளர் ஷாஜிதா நன்றியுரையாற்றினார்

Share this…

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )