BREAKING NEWS

அருள்மிகு அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆலய மகா கும்பாபிஷேகம் ஐந்தாம் தேதி நடைபெறுவதை முன்னிட்டு பூர்வாங்க பூஜைகள் துவக்கம் துர்கா ஸ்டாலின் பங்கேற்பு.

அருள்மிகு அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆலய மகா கும்பாபிஷேகம் ஐந்தாம் தேதி நடைபெறுவதை முன்னிட்டு பூர்வாங்க பூஜைகள் துவக்கம் துர்கா ஸ்டாலின் பங்கேற்பு.

கீழப்பெரும்பள்ளம் அருள்மிகு அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆலய மகா கும்பாபிஷேகம் ஐந்தாம் தேதி நடைபெறுவதை முன்னிட்டு பூர்வாங்க பூஜைகள் துவக்கம் துர்கா ஸ்டாலின் பங்கேற்பு:-

 

 

மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகார் அருகே கீழப்பெரும்பள்ளம் கிராமத்தில் பல நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த அருள்மிகு அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயம் துர்கா ஸ்டாலின் அவர்களின் தந்தையாகிய சா.ஜெயராமன் குடும்ப குலதெய்வம் ஆகும். ஆலயம் புதுப்பிக்கப்பட்டு புதிய ராஜகோபுரம் கட்டப்பட்டுள்ளது. ஆலயத்தின் கும்பாபிஷேகம் வருகின்ற 5-ஆம் தேதி காலை 9:25 மணிக்கு மேல் 10:25 மணிக்குள் நடைபெறுகிறது. 

 

 

இதனை முன்னிட்டு சனிக்கிழமை காலை தேவதா அனுக்ஞை, எஜமான சங்கல்பம், கணபதி ஹோமம், மகாலட்சுமி ஹோமம், தன பூஜை நவக்கிரக ஹோமம், திரவிய ஆகுதி, பூர்ணாகுதி ஆகியவை நடைபெற்றது.

 

தொடர்ந்து தீப ஆராதனை செய்யப்பட்டு வாஸ்து சாந்தி எனப்படும் பூஜை நடைபெற்றது. 

 

 

நிகழ்ச்சியில் திருமதி துர்கா ஸ்டாலின், மற்றும் அவரது குடும்பத்தினர், இந்து அறநிலையத்துறை திருப்பணிகள் உதவி ஆணையர் ஜெயராமன்,

பூம்புகார் சட்டமன்ற உறுப்பினரும், நாகை வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளருமான நிவேதா எம்.முருகன்,

சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் பன்னீர்செல்வம், நாகை வடக்கு மாவட்ட திமுக துணை செயலாளர் மு. ஞானவேலன், சீர்காழி ஒன்றிய குழு தலைவர் கமலஜோதி தேவேந்திரன், வைத்தீஸ்வரன் கோவில் பேரூராட்சி தலைவர் அலெக்சாண்டர், மற்றும் திரளான கிராம பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் பங்கேற்றனர்.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )