BREAKING NEWS

தஞ்சாவூர், தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டுகளான சிலம்பம், மான்கொம்பு, சுருள் வால், வேல்கம்பு ஆடி வீரர், வீராங்கனைகள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தி அசத்தினார்கள்.

தென்மண்டல அளவில் நடைப்பெற்ற இப்போட்டியில் 600க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர். 

தென்னிந்திய பாரம்பரிய சிவம்ப விளையாட்டு கலைக்கழகம் சார்பில், தஞ்சையில், தென்மண்டல அளவிலான சிலம்பம் போட்டி நடைப்பெற்றது. போட்டியை தஞ்சை மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன் துவக்கி வைத்தார்.

தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டுகளில் ஒன்றாகவும், தற்காப்பு கலையாகவும் விளங்கி வருகிறது சிலம்பாட்டம். சிலம்பம் கற்ற வீரர், வீராங்கனைகளுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் அரசு இட ஒதுக்கீடு வழங்கி உள்ளதை அடுத்து பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு சிலம்பம் கற்று தர அதிகம் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இதனை வெளிப்படுத்தும் வகையில் இன்று நடந்த சிலம்பம போட்டியில். சிவகங்கை, புதுக்கோட்டை, மதுரை, தஞ்சை. உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை அழைத்து வந்து இருந்தனர்.

6 வயது முதல் 30 வரை உள்ளவர்கள் பங்கேற்ற இப்போட்டி 6 பிரிவுகளாக நடைப்பெற்றது.

தனி திறன் போட்டி, ஒற்றை கம்பு சண்டை, இரட்டை கம்பு சட்டை, வால் வீச்சு, சுருள்வால், மான்கொம்பு, வேல்கம்பு, அலங்கார சிலம்பம் உள்ளிட்ட போட்டிகள் நடைப்பெற்றன, வெற்றிப் பெற்ற அணிக்கு சுழல் கோப்பையும் சான்றிதழும் வழங்கப்பட்டன.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )