BREAKING NEWS

குடிதண்ணீர் தட்டுப்பாடு, பொதுமக்கள் பிரச்சனையை பூர்த்தி செய்யமுடியவில்லை என புலம்பிய நகராட்சி 3-வது வார்டு திமுக கவுன்சிலர்.

குடிதண்ணீர் தட்டுப்பாடு, பொதுமக்கள் பிரச்சனையை பூர்த்தி செய்யமுடியவில்லை என புலம்பிய நகராட்சி 3-வது வார்டு திமுக கவுன்சிலர்.

திருச்செந்தூர் நகராட்சி முழுவதும் கடும் குடிதண்ணீர் தட்டுப்பாடு . பொதுமக்கள் பிரச்சனையை பூர்த்தி செய்யமுடியவில்லை என நகராட்சி 3-வது வார்டு திமுக கவுன்சிலர் புலம்பிய ஆடியோவால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

 

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் நகராட்சியில் 27 வார்டுகள் உள்ளது. கடந்த சில மாதங்களாகவே நகராட்சி பகுதியில் கடும் குடுநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

 

இந்தநிலையில் நகராட்சி முழுவதும் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக குடிதண்ணீர் தட்டுப்பாடு நிலவுவதாக நகராட்சி 3-வது வார்டு திமுக கவுன்சிலர் ரூபன் புலம்பிய வாட்ஸ்அப் ஆடியோ ஒன்றில் திருச்செந்தூர் முழுவதும் வைரலாகிவருகிறது. இந்த ஆடியோவில் திருச்செந்தூர் நகராட்சியில் குடிதண்ணீர் தட்டுபாடாகா இருக்கிறது.

 

 

இது நிர்வாக சீர்கேடா, இல்ல கடவுளோட சோதனையா, இல்ல திமுக கவுன்சிலர்களாகிய நாங்க வந்த தரித்திரமா என விரக்தியில் பேசும் அவர் அனைத்து பொதுமக்களும் குடிதண்ணீர் கிடைக்கவில்லை என திட்ட ஆரம்ப்பிச்சிட்டாங்க, ஆனால் குடிதண்ணீர் கொடுக்க முடியவில்லை எனவும் நகராட்சி நிர்வாகம் குடிதண்ணீருக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை எனவும் குற்றம்சாட்டியுள்ளார். மேலும் 

 புது நகராட்சி, புது கட்டிடம் அதற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டாம். தண்ணீருக்கு முக்கியத்துவம் கொடுங்க எனவும் இல்லையென்றால் ஒரு நாள் நாம் அனைவரையும் பொதுமக்கள் அடித்து விரட்ட கூடிய நிலைமை வரும் என குற்றம்சாட்டி புலம்பிய 3-வது வார்டு கவுன்சிலர் ரூபன் பேசிய வாட்ஸ்அப் ஆடியோவால் பரபரப்பானது. தற்போது இந்த ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பரவி வருகிறது.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )