BREAKING NEWS

தேனி அருகே பெத்தக்கம்மாள் கோவில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது.

தேனி அருகே பெத்தக்கம்மாள் கோவில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது.

தேனி அருகே உள்ள எஸ் அழகாபுரியில் மிகவும் பழமையான பெத்தக்கம்மாள் கோவில் அமைந்துள்ளது இந்த திருக்கோவிலினை புணரமைக்கப்பட்டு தற்போது கும்பாபிஷேகம் விழாஏற்பாடுகள் நடைபெற்றன.

 

 

முதல் நாளில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு பல்வேறு புண்ணிய தலங்களில் இருந்து கொண்டுவரப்பட்ட புனித நீரினை திருக்கோவிலிக்கு அபிஷேக நிகழ்வுகள் கொண்டுவரப்பட்டது .அதனை தொடர்ந்து புனித நீருக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது.

 

மேலும் கணபதி ஹோமம் மகாலட்சுமி ஹோமம் மற்றும் பல்வேறு கோம பூஜைகளை செய்து இரண்டாம் நாள் நிகழ்ச்சியாக கும்பாபிஷேக விழா நடைபெற்றது இந்த கும்பாபிஷேக விழாவில் புனித நிலை ஊற்றி சிறப்பாக கொண்டாடினார்கள்.

 

 

அதனைத் தொடர்ந்து பக்தர்கள் அனைவருக்கும் புதிய நீரினை ஊற்றினார்கள் இந்த நிகழ்வில் கும்பாபிஷேக விழாவில் கலந்து கொண்ட அனைத்து பக்தர்களுக்கும் கோவில் நிர்வாகம் சார்பாக சிறப்பு அன்னதானமும் நடைபெற்றது இந்த நிகழ்ச்சியில் உள்ளூர் மற்றும் வெளியூர் பக்தர்கள் ஏராளமான பங்கேற்றனர்

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )