தஞ்சை புன்னைநல்லூர் மாரியம்மன் கோவிலில் ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று பல மணி நேரம் காத்திருந்து அம்மனை தரிசனம் செய்து, மாவிளக்கு, நெய் விளக்கு தீபம் ஏற்றி தங்கள் நேர்த்தி கடனை நிறைவேற்றி வழிப்பட்டு வருகின்றனர்.

ஆவணி மாதம் கடைசி ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு, பிரசித்திபெற்ற தஞ்சை புன்னைநல்லூர் மாரியம்மன் கோவிலில் ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று பல மணி நேரம் காத்திருந்து அம்மனை தரிசனம் செய்து, மாவிளக்கு, நெய் விளக்கு தீபம் ஏற்றி தங்கள் நேர்த்தி கடனை நிறைவேற்றி வழிப்பட்டு வருகின்றனர்.

தஞ்சை புன்னைநல்லூர் மாரியம்மன் ஆலயம் உலக புகழ் பெற்றதாகும். இந்த ஆலயத்தில் அம்மன் புற்றாக தோன்றி அருள்பாளித்து வருகிறார். அம்மை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் ஆலயம் மண்டபத்தில் தங்கி விரதத்துடன் வேப்பிலை மீது படுத்து வேண்டி கொண்டால் அம்மை நோய் விலகும் என்பதும்,

மேலும் வேண்டிய வரம் கைக்கூடும் என்பது பக்தர்களின நம்பிக்கையாக உள்ளது இத்தகைய சிறப்புமிக்க புன்னை நல்லூர் மாரியம்மனை வழிபட ஆவணி மாதம் கடைசி ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு பக்தர்கள் பல்வேறு பகுதிகளில் இருந்து பாதசாரியாக கோவிலுக்கு வந்தனர்.
பல்வேறு நோய்களில் இருந்து மீண்டு வந்தவர்கள் மண்ணால் செய்யப்பட்ட கண், பாதம், அமமன் முகம் போன்ற உருவங்களை நேர்த்தி கடனாக செலுத்தி மாவிளக்கு. மற்றும் நெய் விளக்கில் தீபம் ஏற்றி வழிப்பட்டனர்.

பொது வழி மற்றும் சிறப்பு வழியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று பல மணி நேரம் காத்திருந்து மாரியம்மனை தரிசனம் செய்து வழிப்பட்டு வருகின்றனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
