BREAKING NEWS

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை எடப்பாடி பழனிசாமி நேரில் சந்தித்து நிவாரணப் பொருட்களை வழங்கினார்.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை எடப்பாடி பழனிசாமி நேரில் சந்தித்து நிவாரணப் பொருட்களை வழங்கினார்.

சேலம் மாவட்டம், எடப்பாடி பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கனமழை காரணமாக சரபங்கா நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

 

இதனால், பொதுமக்களின் குடியிருப்புகளில் தண்ணீர் புகுந்துள்ளது. இதனைத் தொடர்ந்து, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வீடுகளை அரசு அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு செய்து பாதிக்கப்பட்ட மக்களை எடப்பாடி நகராட்சி தொடக்கப் பள்ளியில் தங்க வைத்துள்ளனர். மேலும், பாதிக்கப்பட்ட மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக முடங்கியுள்ளது.

 

 

இந்நிலையில், வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்ட 70-க்கும் மேற்பட்ட பொதுமக்களை முன்னாள் முதலமைச்சரும், அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி இன்று நேரில் சந்தித்து குறைகளை கேட்டறிந்தார். பின்பு பாதிக்கப்பட்டவர்களுக்கு அரிசி,பருப்பு,காய்கறி போன்ற நிவாரணப் பொருட்களையும் வழங்கினார்.

 

 

பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், கொரோனா பேரிடர் காலத்தில் இருந்து பொதுமக்கள் கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வரும் நிலையில் தற்போது மின் கட்டண உயர்வு கடும் கண்டனத்துக்குரியது, அதனை தொடர்ந்து, நீதிமன்ற தீர்ப்பு மகிழ்ச்சி அளிக்கிறது தர்மம், நீதி வென்றுள்ளது.

 

 

ஏற்க்கனவே அதிமுகா ஆட்சியில் 100 ஏரிகளை தூர்வாரும் திட்டம் கொண்டுவரப்பட்டது அதை இந்த அரசு விரைவாக நிரவேற்றியிருந்தால் விவசாயிகள் மகிழ்ச்சியாக இருந்து இருப்பார்கள் திமுக ஆட்ச்சியானது ஆமைவேகத்தில் நடந்து கொண்டு உள்ளது வேதனையளிக்கிறது என்று கூறினார்.

 

 

இந்த நிகழ்ச்சியில், எடப்பாடி நகராட்சி செயலாளர் முருகன், மற்றும் நகர அம்மா பேரவை செயலாளர் கதிரேசன், மற்றும் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் கழக உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )