டிரைவர் கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையில் கவிழ்ந்த விபத்தில், பெண் வழக்கறிஞர் உள்பட இரண்டு பேர் பலி.

கொடைரோடு அருகே, டிரைவர் கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையில் கவிழ்ந்த விபத்தில், பெண் வழக்கறிஞர் உள்பட இரண்டு பேர் பலி. போலீஸ் விசாரணை
நிலக்கோட்டை அடுத்த, கொடைரோடு அருகே திண்டுக்கல் சாலை, ஜெ.மெட்டூர் என்ற இடத்தில், டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையில் கவிழ்ந்த விபத்தில், பெண் வழக்கறிஞர் உட்பட 2 பேர் பலியானார்கள்.

விருதுநகர் அருகே, சாத்தூரைச் சேர்ந்த வழக்கறிஞர் மைக்கேல்பாரதி (53) அவரது ஜூனியர் வழக்கறிஞர் மோனிகா ஆகிய இருவரும் சேலம் கோர்ட்டில் ஒரு வழக்கிற்காக, திங்கள்கிழமை சென்று விட்டு, பின்னர், மீண்டும் சாத்தூரை நோக்கி திரும்பி கொண்டிருந்தனர்.

அப்போது, திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை தாலுகா, கொடைரோடு அடுத்த, ஜெ.மெட்டூர் பாலம் அருகே கார் வந்து கொண்டிருந்தபோது, திங்கள்கிழமை மாலை, கார் திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து, நிலைத்திடுமாறி சாலை உள்ள நடு தடுப்புச் சுவரில் மோதியதில், கார் எதிர்ப்புறம் சாலையில் தலைகீழாக உருண்டோடியது.
இதில், ஜூனியர் பெண் வழக்கறிஞரான மோனிகா (25) என்பவர், சம்பவ இடத்திலேயே பலியானார்.

கார் ஓட்டுநர் அசோக்குமார் சிகிச்சைக்காக, திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் பலியானார். வழக்கறிஞர்.

மைக்கேல்பாரதி சிகிச்சைக்காக, திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுகுறித்து அம்மைநாயக்கனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகலட்சுமி மற்றும் போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்துள்ளது.

இந்த விபத்தால், மதுரை திண்டுக்கல் நான்கு வழி சாலையில், சிறிது நேரம் போக்குவரத்து தடைபட்டது.
