BREAKING NEWS

அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு நெல்லை மாவட்ட அளவிலான மிதிவண்டிப் போட்டி.

அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு நெல்லை மாவட்ட அளவிலான மிதிவண்டிப் போட்டி.

திருநெல்வேலி மாவட்டம்,

பேரறிஞர் அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு பள்ளி மாணவ மாணவியருக்கான மாவட்ட அளவிலான மிதிவண்டிப் போட்டி பாளையங்கோட்டை அண்ணா விளையாட்டரங்கில் நடைபெற்றது.

மாவட்டத்தின் பல்வேறு பள்ளிகளில் இருந்து 150க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர் கலந்து கொண்டனர்.

17 வயதிற்குட்பட்ட மாணவர்களுக்கான 20 கிலோமீட்டர் போட்டியில்‌ பேட்டை காமராஜர் நகர்மன்ற மேல்நிலைப் பள்ளி மாணவர் இராஜன் ஸ்மித் முதலிடம் பிடித்தார்.

வெற்றிப் பெற்றதற்கான சான்றிதழ் மற்றும் ₹5000க்கான காசோலையை மாவட்ட விளையாட்டு அலுவலர் வழங்கினார்.

வெற்றி பெற்ற மாணவருக்கு பள்ளியின் தலைமையாசிரியர் முனைவர் திரு எஸ் எஸ் சோமசுந்தரம் அவர்கள் மாணவருக்கு பொன்னாடை அணிவித்து இனிப்பு வழங்கி பாராட்டினார்.

அப்போதுபள்ளியின் விளையாட்டு ஆசிரியர் திரு முத்துக்குமார் வேதியியல் ஆசிரியர் திரு ஜார்ஜ் ஸ்டீபன் முதுகலை பொருளாதார ஆசிரியர் பொன்னுசாமி மற்றும் கணித ஆசிரியை திருமதி முத்துலட்சுமி ஆகியோரும் மாணவரை வெகுவாக பாராட்டினர்.

Share this…

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )